districts

img

அண்ணாமலைப் பல்கலை.யில் மாணவர் சேர்க்கை விண்ணப்பம்

சிதம்பரம், ஜூலை 7- அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நடப்பு கல்வியாண்டில் (2022-23) மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்ப விநி யோகத்தை துணைவேந்தர் இராம. கதிரேசன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வம், அண்ணாமலைப் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பிரகாஷ், மக்கள் தொடர்பு அதிகாரி ரத்தினசம்பத், துறை முதல்வர்கள், இயக்குநர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் பங்கேற்றனர். அண்ணாமலைப் பல்கலைக் கழக பாடப்பிரிவுகள் மற்றும் விண்ணப்பங்கள் குறித்து www.annamalaiuniversity. ac.in என்ற இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். மேலும், பூர்த்தி செய்யப்பட்ட இணையவழி விண்ணப்பங்கள் 8.8.2022 அன்று மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.