districts

img

தலித் ஊராட்சிகளுக்கு கூடுதல் நிதி: தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தல்

கடலூர், அக்.17- தலித் ஊராட்சிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கடலூர் மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது. சங்கத்தின் 4ஆவது மாவட்ட மாநாடு குறிஞ்சிப்பாடியில் நடைபெற்றது. மாநிலப் பொருளாளர் இ.மோகனா மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.கே. மகேந்திரன் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். மணிவண்ணன் நன்றி கூறினார். ஊராட்சிகளில் திட்டப்பணிகளை அரசியல் குறுக்கீடுகள் இல்லாமல் ஊராட்சி மன்ற தலைவரே செய்ய அனுமதிக்க வேண்டும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் நிலவும் தீண்டாமை வடிவங்களை கொடுமைகளை களைந்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், மாவட்டம் முழுவதும் அனைத்து கிராமங்களிலும் குடிமனை மற்றும் பட்டா இல்லாத ஏழை எளிய மக்க ளுக்கு பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.  மாவட்டத் தலைவராக ஜே. ராஜேஷ்கண்ணன், செயலாளராக பழ. வாஞ்சிநாதன், பொருளாளராக வி.சுப்பு ராயன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

;