districts

img

முழுக் கொள்ளளவை எட்டிய ஓடத்துறை ஏரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அதிகாரிகள் எச்சரிக்கை

கோபி, டிச.4- கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஓடத்துறை  ஏரி அதன் முழு கொள்ளவை எட்டியுள்ளதால், ஏரிக்கு  வரும் 200 கனஅடி தண்ணீ ரையும் உபரிநீர் ஓடையில்  திறக்கப்பட்டுள்ளது. உபரி நீர் ஓடையின் கரையோ ரத்தில் உள்ள பொதுமக்கள்  பாதுகாப்பாக இருக்க பொதுப்பணித்து றையினர் அறிவுறுத்தியுள்ளனர். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையம் அருகே ஓடத்துறை ஊராட்சியில் 200 ஏக்கர் பரப்பளவில் 15  அடி உயரமும் 45.88 மில்லியன் கனஅடி கொள்ளளவும் கொண்ட மிகப்பெரிய ஏரி  அமைந்துள்ளது. அந்த ஏரிக்கு கீழ்பவானி பிரதான பாசன கால்வாய் கசிவுநீர் மற்றும்  மழைக்காலங்களில் வழிந்தோடும் மழைநீர்  ஆகியவை ஏரிக்கு தண்ணீர் வரத்தாகும். கடந்த ஆண்டுகளில் தமிழக அரசு குடிமரா மத்து திட்டத்தின் கீழ் இந்த ஏரி தூர்வா ரப்பட்டு தரைகள் பலப்படுத்தப்பட்டு ஆழப்படுத்தப்பட்டது. இந்நிலையில், கீழ்ப வானி பிரதான வாய்க்காலில் முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் அதன் கசிவுநீர் தண்ணீர் ஓடத்துறை ஏரிக்கு  வந்து சேர்ந்தது.  இதனிடையே, கடந்த வாரங்களில் பெய்த தொடர் மழையினால் நீர் வரத்து அதிகரித்து ஏரியின் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் ஏரிக்கு வரும் நீர்  விநாடிக்கு 200 கனஅடி வீதம் உபரிநீராக  வெளியேற்றப்படுகிறது. மேலும், மழை  அதிகரித்தால் கூடுதல் உபரிநீர் வெளியேற் றப்படும். எனவே, கரையோரம் வசிக்கும்  பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பாது காப்பாக இருக்க வேண்டுமென பொதுப்ப ணித்துறையினர் எச்சரித்துள்ளனர்.

;