districts

img

அலையாத்தி காடுகளை பாதுகாக்க நாற்றங்கால் பண்ணை துவக்கம்

இராமநாதபுரம், செப்.10-  இராமநாதபுரம் மாவட்டம், ஆர்எஸ் மங்கலம் ஊராட்சி ஒன்றியம், சித்தூர்வாடி ஊராட்சி மேலச்சேந்தனேந்தல் கிராமத்தில் செப்டம்பர் 10 சனிக்கிழமையன்று ஊரக  வளர்ச்சித் துறையின் மூலம் அலையாத்தி காடுகள் பாதுகாக்கும் திட்டத்தில் தேசிய ஊரக வளர்ச்சி உறுதி திட்டத்தின் கீழ்  நாற்  றங்கால் பண்ணை உருவாக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலை வர்  ஜானி டாம் வர்கீஸ் தலைமையேற்று புதிய நாற்றங்கால் பண்ணையில் விதை கள் நடவு செய்து துவக்கி வைத்தார். பின்னர் அவர்  தெரிவிக்கையில்,  இத்திட்  டம் மூலம் அலையாத்தி காடுகளை பாது காக்க வேண்டும். அந்த வகையில் கிழக்கு கடற்கரை சாலையில் இராமேஸ்வரம் முதல் எஸ்.பி.பட்டினம் வரை சுமார்  52 கிலோ மீட்டர் தூரம் கடற்கரை ஒட்டிய சாலை பகுதி  ஆகும். பல ஆண்டுகளுக்கு முன்பு இப்பகு தியில் அலையாத்தி காடுகளை அதிகளவு மரங்கள் கொண்ட அடர்ந்த பகுதியாக இருந்து வந்தது. நாளடைவில் மரங்கள் குறைந்த அளவு எண்ணிக்கையில் இருந்து வருகின்றன. அதை மீண்டும் பரா மரித்து பாதுகாக்கும் வண்ணம் இப்பகுதி யில் சுமார் ஒரு லட்சம் மரக்கன்றுகள் உரு வாக்கும் வகையில் திட்டமிட்டு இன்றைக்கு இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதில் சுரபுன்னை, கண்ணாசெடி, தில்லை ஆகிய மரச்செடிகள் வளர்க்கப்படுகின்றன. இப்பண்ணையினை எம்.எஸ்.எம். சாமி நாதன் அறக்கட்டளை மூலம் விஞ்ஞானி களின் ஆலோசனைப்படி இங்குள்ள நாற்றங்கால் பண்ணையில் மரக்கன்றுகள் வளர்க்க உள்ளன. அதுமட்டுமின்றி இப்பகு தியில் உள்ள மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு நாகப்பட்டினத்தில் உள்ள வேளாண் ஆராய்ச்சி பயிற்சி  மையத்தின் மூலம் பயிற்சி வழங்கப் பட்டுள்ளது. இதன் மூலம் கன்றுகள் எளி தாக  வளர்த்திட மகளிர் குழுக்களுக்கு பேரு தவியாக இருக்கும்.  

இங்கு அதிக அளவு மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிக்கும் பொழுது சுனாமி கள் போன்ற அபாய நிலைகளை தடுத்திட திட்டம் பயனுள்ளதாக இருக்கும். அது மட்டுமின்றி கடற்கரை ஒட்டி உள்ள பகுதி என்பதால் மீன்கள் இனப்பெருக்கத்திற்கும் அதிகளவு வெளிநாட்டு பறவைகள் வந்து செல்வதற்கும் சிறந்த வனப்பகுதியாகவும் அமைந்திடும். குறிப்பாக கடற்கரை ஒட்டி  அதிகளவு மரங்கள் வளர்ப்பதன் மூலம் அலைகளை தடுக்கும் வண்ணம் உள்ள தால் முன்னோர்களால் அலையாத்தி காடு கள் என அழைத்து பாதுகாத்து பராமரித்து வந்தனர். அத்தகைய அலையாத்தி காடு களை இன்றைய இளைய சமுதாயத்தின ரும் பாதுகாத்திடும் வகையில் அனைத்து பகுதிகளிலும் மரக்கன்றுகள் நடவு செய்து பராமரித்திட வேண்டும் என்று தெரிவித் தார்.  இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கே.ஜெ.பிரவீன் குமார், எம்.எஸ்.எம் சாமிநாதன் அறக்கட்டளை விஞ் ஞானி முகிலன், சித்தூர்வாடி ஊராட்சி மன்ற தலைவர் ராணி காளிமுத்து ஆகி யோர் கலந்து கொண்டனர்.

;