districts

img

காலிப் பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

அரியலூர், ஏப்.13 - சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் 9 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். ஓய்வு பெறுபவர்களுக்கு ஒட்டு மொத்த தொகையை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். சமையல் உதவியாளர் அனைவருக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பாக தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றிய தலைவர் சாந்தி தலைமை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர், ஊரக வளர்ச்சி துறை அலுவலர், சங்கத்தின் மாவட்ட பொருளாளர் முருகானந்தம் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய செயலாளர் மகாலட்சுமி, இணைச் செயலாளர் விஜயகுமாரி, பொருளாளர் சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாவட்ட துணைத் தலைவர் சிபி ராஜா, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கருணாநிதி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கஸ்தூரி, சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஷர்மிளா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

தஞ்சாவூர் 
தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சத்துணவு ஊழியர்கள் சங்க ஒன்றியத் தலைவர் கே.அய்யப்பன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் லதா கோரிக்கை விளக்கவுரையாற்றினார். மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன், அரசு ஊழியர் சங்க வட்டக் கிளைத் தலைவர் இளங்கோ, செயலாளர் அஜய்ராஜ், மாவட்ட பொருளாளர் பாஸ்கரன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.கோதண்டபாணி நிறைவுரையாற்றினார். ஒன்றியப் பொருளாளர் தியாகராஜன் நன்றி கூறினார். 

சேதுபாவாசத்திரம் 
சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியத் தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க வட்டாரத்  தலைவரும், மாவட்ட இணைச் செயலாளருமான நாவலரசன் விளக்க உரையாற்றினார். நிறைவாக ஒன்றியப் பொருளாளர் மஞ்சுளா நன்றி கூறினார். 

பேராவூரணி 
பேராவூரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியத் தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். அரசு ஊழியர்கள் சங்கம் ஸ்ரீ.மகேஷ் துவக்கி வைத்து பேசினார். பட்டுக்கோட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய தலைவர் எஸ்.திருச்செல்வம் தலைமை வகித்தார்.  அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சிவ.ரவிச்சந்திரன், பட்டுக்கோட்டை வட்டத் தலைவர் அறிவழகன், வட்டச் செயலாளர் ஜெயக்குமார், சத்துணவு ஊழியர் சங்கம் ஒன்றியச் செயலாளர் விஜயா, ஒன்றிய துணைச் செயலாளர் ஜோசபின், ஒன்றிய துணைத் தலைவர்கள் தமிழ் இலக்கியா, லோகநாதன், மருந்தாளுநர் சங்க பட்டுக்கோட்டை நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  இதேபோல், ஒரத்தநாடு, அம்மாபேட்டை, திருவையாறு, கும்பகோணம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள் உள்ளிட்ட பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் 426 பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

வேதாரண்யம்
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

;