அரியலூர், பிப்-27 - அரியலூரில் ரோந்து மற்றும் குற்ற வழக்கில் சிறப்பாக செயல்பட்ட காவல் துறையினருக்கு, காவல் துறை துணைத் தலைவர் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். திருச்சி சிறையில் காவல் துறை துணைத்தலைவர் ஏ.சரவணசுந்தர் அரியலூர் மாவட்டத்தில் குற்ற வழக்கு களில் சிறப்பாக செயல்பட்ட அரியலூர் மாவட்ட காவல் துறையினர் கயர்லாபாத் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜவேல், திருமானூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அப்துல் ரசாக், தலைமை காவலர்கள் செந்தில் ஆனந்த் மற்றும் காவலர் செந்தில் முருகன் ஆகியோருக்கு திருச்சி காவல்துறை துணைத் தலை வர் முகாம் அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்து பண வெகுமதி மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டி னார். இதே போன்று அரிய லூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட ரோந்து காவ லர்கள் காந்தி, வேல் முருகன், பாலமுருகன் ஆகியோருக் கும் பண வெகுமதி மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.