districts

சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு அரியலூர் நகராட்சி ஆணையரிடம் சிபிஎம் மனு

அரியலூர், ஏப்.16 - அரியலூர் நகராட்சியில் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மறு பரிசீலனை செய்ய வலியு றுத்தி நகராட்சி ஆணையரி டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மனு அளித்தனர். தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின்படி உள்ளாட்சி அமைப்புகளுக் கான சொத்துவரியை உயர்த்துவதற்கு அரசாணை வெளியிட்டுள்ளது. ஒன்றிய  அரசு மாநில திட்டங்களுக் கான நிதி ஒதுக்கீடு செய்கிற போது மாநில அரசு மற்றும் உள்ளாட்சி  அமைப்புகளின் உரிமைகளை பறிக்கிற வகை யில் நிபந்தனைகள் எதுவும் விதிக்க கூடாது.  ஆனால் தற்போதைய ஒன்றிய அரசின் நடவடிக் கைகளும் அதற்கேற்ப மாநில அரசின் அரசாணை யும் முழுமையாக உள்ளாட்சி அமைப்புகளின் உரிமைகளை பறித்து விட்டது. இதனை மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி வன்மை யாக கண்டிக்கிறது. நெடுங்காலமாக உள்ளாட்சி அமைப்புகளில் தீர்மானிக்கப்படும் சொத்து வரியை உள்ளாட்சி அமைப்பு கள்தான் தீர்மானிக்கும். சென்னை போன்ற நகரங்க ளில் இருக்க கூடிய வணிக நிறுவனங்கள் மற்றும் குடி யிருப்புகளின் சொத்து மதிப்பும் தமிழகத்தின் இதர பகுதிகளில் இருக்க கூடிய மதிப்பும் வியாபாரமும் பெருமளவு மாறுபட்டது. வளர்ந்த பகுதிகளுக்கும் வளர்ச்சியடையாத பகுதி களுக்கும் ஒப்பீடு செய்யவே  முடியாது.  

25 சதவீதம் முதல் 150 சத வீதம் வரை உயர்த்தப்பட்டு உள்ள வரி உயர்வு பெரும் சுமையை ஏற்படுத்தும். அரி யலூர் நகரில் 70 சதவீதம்  ஏழை நடுத்தர மக்கள் வாடகை வீட்டில் வசிப்ப வர்கள். வீட்டு வரி உயர்வால் வாடகை உயரும் அபாயம் இருக்கிறது. அதேபோல் பல  ஆயிரக்கணக்கான சிறு வியா பாரிகள் கடைகளை வாட கைக்கு எடுத்து வியாபாரம் செய்து வருகிற நிலையில், வாடகை கடுமையாக உயரும் சூழலும் உள்ளது.  எனவே தாங்கள் இந்த  வரி உயர்வை மறு பரி சீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்  கொள்வதாக கட்சியின் அரியலூர் ஒன்றி யச் செயலாளர் துரை.அரு ணன், சொத்து வரி உயர்வை  மறு பரிசீலனை செய்ய கோரி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நகராட்சி பொறி யாளரிடம் மனு அளித்தார்.  இதில் சிபிஎம் செயற்குழு  உறுப்பினர் கிருஷ்ணன், மாவட்டக் குழு துரைசாமி,  மலர்கொடி,  அருண்பாண்டி யன், மாரிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.

;