அரியலூர், பிப்.1- அரியலூர் மாவட்டம் செந்துறை அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு சார்பில், பள்ளி நூலகத்துக்கு உறுப்பி னர் சேர்க்கை நேற்று நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலை மையாசிரியை ரெ.ஆதிரை தலைமை வகித்தார். உதவி தலைமையாசிரியர் மணி மேகலை முன்னிலை வகித் தார். சமூகஆர்வலர் மதியழ கன் தொடங்கி வைத்தார். நூலகர் தி.இளவரசன், 100 மாணவிகளை நூலக உறுப் பினர்களாக பதிவு செய்தார். மேலும், தினசரி நாளிதழ் களுக்கு ஒரு வருட சந்தா செலுத்தி நாளிதழ்களை பள்ளி மாணவிகளுக்கு வழங்கினார்.