districts

ஜெயங்கொண்டம் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஜூன் 21-இல் தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

அரியலூர் ஜூன் 13 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி ஏஐடியுசி தூய்மை தொழிலாளர்களின் பேரவை சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. சங்க தலைவரும், தமிழ்நாடு உள்ளாட்சித் துறை பணியாளர் சம்மேளன மாநிலச் செயலாளருமான தண்டபாணி கலந்து கொண்டார்.  ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு எம்.இ.டி.இ சென்னை ஒப்பந்ததாரர் மூலம் பிடிக்கப்பட்ட 15 மாதத்திற்கு இருப்பு தொகை கிடைத்திட செய்ய வேண்டும். நிரந்தர தூய்மை பணியாளர்களுக்கு, பணிக்கு சேர்ந்த காலத்திலிருந்து நடப்பு ஆண்டு வரை இபிஎப் இருப்பு வட்டியுடன் கணக்கு தொகை கொடுக்கப்பட வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ குடும்ப மருத்துவ அட்டை உடனே வழங்கப்பட வேண்டும்.  ‘மாஸ் ஒர்க்’ என்ற பெயரில் பணிக்கு உரிய தளவாட சாமான்கள் எதுவும் கொடுக்காமல் வேலையை செய்ய நிர்ப்பந்திப்பது, பணிக்கு உரிய கருவிகள் கேட்டால் வேலையை விட்டு நிறுத்துவோம்; ஊரைவிட்டு மாற்றுவோம் என நகராட்சி நிர்வாகம் மிரட்டும் போக்கை கைவிட வேண்டும். நிர்வாகத்தின் இந்த மிரட்டும் போக்கை கண்டித்து ஜூன் 21 அன்று ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் முன்பு ஏஐடியுசி தூய்மை பணியாளர்கள்-தொழிலாளர்கள் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

;