districts

img

கீழக்குடியிருப்பு கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை

அரியலூர், அக்.21- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் முன்பு கீழக்குடி யிருப்பு கிராம மக்களுக்கு அடிப்படை வசதி கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிளைச் செயலாளர் மகேந்திரன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை ஒன்றிய செயலாளர் எம்.வெங்கடாசலம் துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர்  எம். இளங்கோவன், ஆர்.மணிவேல், பி.பத்மா வதி ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், கீழக்குடியிருப்பு கிராமம் புதுத்தெருவில் சர்வே எண்.329, காளி நத்தம் இடத்தை ஒரே குடும்பத்தில் உள்ள இருவருக்கு பட்டா வழங்கியதை ரத்து  செய்து அரசு பொது சேவைக்கு பயன்படுத்த வேண்டும். பொதுப் பாதைகள் ஆக்கிரமிப்பு களை உடனே அகற்ற வேண்டும். கீழக்குடி யிருப்பு ஒத்த தெருவில் உள்ள ஆக்கிர மிப்பை அகற்றி தார்ச்சாலை அமைக்க வேண்டும். புது தெரு சிமெண்ட் சாலையில் உள்ள தெருவில் மின்விளக்குகள் அமைத்து  கொடுக்க வேண்டும். சுடுகாட்டில் நான்கு  பக்கமும் சுற்றுச்சுவர் அமைத்து மின்விளக்கு  அமைத்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட  பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

;