districts

தவறான சிகிச்சை அளித்த மருத்துவமனைகள்: இழப்பீடு வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவு

அரியலூர், டிச.2- தவறான சிகிச்சை அளித்த 2 தனியார்  மருத்துவமனைகள் வாடிக்கையாளர் களுக்கு, ரூ.12.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என அரியலூர் நுகர்வோர் குறை தீர் ஆணையம் வியாழனன்று தீர்ப்பு அளித் தது. அரியலூர் காந்தி நகரில் வசித்து வரு பவர் கணேசன். இவரது மகள் எழில்செல்வி (21). இவருக்கு குழந்தை அரியலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் 2018 மார்ச் மாதம் பிறந்தது. அப்போது, அதிக ரத்தபோக்கு ஏற்பட்டுள் ளது. இதனால், திருச்சி அரசு மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு உரிய சிகிச்சை கள் அளித்தும் பலனுமின்றி எழில்செல்வி யின் உயிரிழந்தார். இதுதொடர்பாக எழில் செல்வி தந்தை கணேசன் அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத் தில் வழக்கு தொடர்ந்தார்.  வழக்கை விசாரித்த ஆணையத்தலைவர் வீ.ராமராஜ் தலைமையிலான அமர்வு தனி யார் மருத்துவமனை மருத்துவரின் அஜாக்கி ரதையால் எழில்செல்வி உயிரிழந்தது உறுதி  செய்யப்பட்டுள்ளது.  எனவே, உயிரிழப்புக்கு காரணமான தனி யார் மருத்துவமனை, எழில்செல்வியின் குழந் தைக்கு ரூ.12 லட்சத்தை இழப்பீடாக வழங்க வேண்டும். அதனை, தந்தையை காப்பாளராக கொண்டு வங்கியில் டெபா சிட் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். இதேபோல், சென்னை, கே.கே.நகரை  சேர்ந்தவர் பெரிடிநந்த் மனைவி சஹானா  பெரிடிநந்த் (32). இவர், சென்னையில் உள்ள தனியார் தோல் சிகிச்சை மருத்துவ மனையில், முகத்தில் உள்ள முடிகளை அகற்ற கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிகிச்சை மேற்கொண்டுள்ளார். அப்போது, முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.  இதுகுறித்து மருத்துவமனையில் முறை யிட்டபோது, உரிய பதில் இல்லை. இத னால், சென்னை தெற்கு மாவட்ட நுகர்வோர்  குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந் தார். இந்த வழக்கு கடந்த ஜூலை மாதம் விசாரணைக்காக அரியலூர் மாவட்ட நுகர் வோர் குறைதீர் ஆணையத்துக்கு மாற்றப் பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஆணையத் தலைவர் வீ.ராமராஜ் தலைமையிலான அமர்வு, சிகிச்சை அளித்த மருத்துவமனை ரூ.50 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

;