districts

img

சித்தமல்லி நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

அரியலூர், ஜன. 28 - அரியலூர் மாவட்டம் சித்தமல்லி நீர்த்தேக்கத்தில் இருந்து மூன்று மதகுகள் மூலம் பாசன ஏரிகளுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன்மூலம் நடுவலூர், இருகையூர், காரைக்குறிச்சி, கோடங்குடி, ஸ்ரீபுரந்தான் உள்ளிட்ட பல்வேறு கிரா மங்களில் உள்ள நஞ்சை மற்றும் புஞ்சை நிலங்கள் என 5080 ஏக்கர் பாசன நிலங்கள் பாசன வசதி பெற்று வரு கின்றன.  இந்நிலையில் தற்போது அணையில் 208 மில்லியன் கனஅடி நீர் இருப்பு வைக் கப்பட்டுள்ளது. இதனை யடுத்து சித்தமல்லி நீர்  தேக்கத்திலிருந்து பாச னத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற விவசா யிகளின் கோரிக்கையை ஏற்று, சித்தமல்லி நீர்த்தேக் கத்திலிருந்து பாசன நிலங்க ளுக்கு பாசன வசதி பெறும் வகையில் மூன்று மதகுகள் மூலம் பாசன நீரை மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி திறந்து வைத்தார்.  ஜன.28 முதல் மார்ச் 21 ஆம் தேதி வரை முறை வைத்து 52 தினங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார். வியாழனன்று 25 கனஅடி தண்ணீர் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.

;