districts

img

இலவச வீட்டு மனை பட்டா, குடிமனைப்பட்டா வழங்கிட கோரி சிபிம் உண்ணாவிரதம்

அரியலூர், அக்.20- அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம், அரியலூர் ஒன்றியங்க ளில்  இலவச வீட்டு மனை பட்டா,  குடிமனைப் பட்டா வழங்கிட கோரி பொதுமக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெருந்திரள் உண்ணா விரதப் போராட்டம் நடைபெற்றது.  ஜெயங்கொண்டம் அரசு சாவடி முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு ஜெயங்கொண்டம் ஒன்றியச் செய லாளர் எம்.வெங்கடாசலம் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மணிவேல் துவக்கி வைத்தார்.  போராட்டத்தில், சிபிஎம் அரியலூர் மாவட்டச் செயலாளர் இளங்கோவன், கே.மகாராஜன், டி.அம்பிகா, ஆண்டி மடம் வட்டச் செயலாளர் வி.பரம சிவம், தா.பழூர் ஒன்றியச் செயலாளர் ஜெ.இராதாகிருஷ்ணன் ஆகியோர் விளக்கிப் பேசினர்.  உண்ணாவிரதப் போராட்டத்திற்கு மாவட்ட குழு உறுப்பினர்கள் ஆர்.இள வரசன், எஸ்.குமார், எஸ்.மீனா, டி. தியாகராஜன், எ.சேகர், பி.பத்மாவதி, கே.கண்ணன், வி.வீரப்பன், எ.தங்க ராசு, ஆர்.செந்தில்வேல், எ.அருணாச்ச லம் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். உண்ணாவிரத போராட்டத்தில் ஜெயங்கொண்டம் ஒன்றியத்திற்குட் பட்ட பகுதிகளில் கோவிலுக்கு சொந்த மான இடங்களை வகை மாற்றம் செய்து பட்டா வழங்க தமிழக அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும், ஏழை, எளிய மக்களுக்கு போர்கால அடிப்படை யில் பட்டா வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்,  

ஜெயங்கொண்டம், தா.பழூர், ஆண்டிமடம் ஆகிய ஒன்றி யங்களில் உள்ள பஞ்சமி நிலங்களில் உள்ள தனிநபர்களின் ஆக்கிரமிப்பை அகற்றி பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.  உண்ணாவிரத போராட்டத்தை முன்னாள் எம்எல்ஏ, மாநிலச் செயற்குழு  கே.பாலபாரதி முடித்து வைத்தார். அரியலூர் ஒன்றியம் அரியலூர் அண்ணாசிலை அருகில் இலவச வீட்டுமனை பட்டா, குடி மனைப்பட்டா வழங்கக் கோரி நடை பெற்ற உண்ணாவிரத போராட்டத்தி ற்கு அரியலூர் ஒன்றியச் செயலாளர் துரை.அருணன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எம்.இளங்கோவன் தொடங்கி வைத்தார். உண்ணாவிரதப் போராட்டத்தில் சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பி னர் கே.பாலபாரதி சிறப்புரையாற்றி னார்.  இதில், மாவட்டக்குழு உறுப்பினர் கள் பி.துரைசாமி, எஸ்.மலர்கொடி, எம்.சந்தானம், எ.அருண்பாண்டியன், எஸ்.பி.சாமிதுரை, என்.இயேசுதாஸ், சுப்பு கார்த்திக், இ.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.   உண்ணாவிரதப் போராட்டத்தில், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கே.கிருஷ்ணன், எ.கந்தசாமி, செந்துறை வட்டச் செயலாளர் ஆர்.புனிதன், திருமானூர் ஒன்றியச் செய லாளர் கு.அர்ச்சுணன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். உண்ணாவிரத போராட்டத்தை மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.வாலண்டினா முடித்து வைத்தார்.

;