districts

img

சிபிஎம் விருதுநகர் மாவட்ட மாநாடு எழுச்சியுடன் தொடங்கியது

விருதுநகர், டிச.6 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விருதுநகர் மாவட்ட 24 ஆவது மாநாடு எழுச்சியுடன் துவங்கியது. விருதுநகரில் மூளிப்பட்டி அரண் மனை அருகே மாநாடு துவக்க நிகழ்ச்சி  நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மாநிலக் குழு உறுப்பினர் எம்.மகாலட்சுமி தலைமை வகித்தார்.

திருச்சுழி ஒன்றியம்  எம்.ரெட்டியபட்டியிலிருந்து முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர்  எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் நினை வாக கொண்டு வரப்பட்ட நினைவுக் கொடியை மாவட்ட செயற்குழு உறுப்பி னர் வி.முருகன் தலைமையில், மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி பெற்றுக் கொண்டார். சாத்தூரில் இருந்து கொண்டு வரப்பட்ட எம்.சுப்பிரமணியன் நினைவு கொடி மரத்தை மாவட்டக்குழு உறுப்பி னர் கே.விஜயகுமார் தலைமையில் மாவட்டச் செயலாளர் கே.அர்ஜூனன் பெற்றுக் கொண்டார்.

திருவில்லிபுத்தூ ரில் இருந்து பல்வேறு பகுதிகள் வழியாக விருதுநகருக்கு எடுத்து வரப்பட்ட தோழர் பி.தங்கப்பழம் நினைவு ஜோதியை மாவட்டக்குழு உறுப்பினர் எம்.திருமலை  தலைமையில் மூத்த தோழர் எஸ்.பால சுப்பிரமணியன் பெற்றுக் கொண்டார். வத்திராயிருப்பில் இருந்து எடுத்து வரப்பட்ட தோழர் எம்.முத்துச்சாமி நினைவு  ஜோதியை மாவட்டக்குழு உறுப்பினர் சி.ஜெயக்குமார் தலைமையில் மாவட்ட  செயற்குழு உறுப்பினர் அ.விஜயமுரு கன் பெற்றுக் கொண்டார்.

விருதுநகர் பாண்டியன் நகரில் இருந்து பல்வேறு பகுதிகள் வழியாக எடுத்து வரப்பட்ட தோழர் வி.சரவணன் நினைவு ஜோதியை  மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.பால சுப்பிரமணியன் தலைமையில் மூத்த தோழர் எஸ்.கே.ராஜேந்திரன் பெற்றுக் கொண்டார். பாத்திமாநகரில் இருந்து கொண்டு  வரப்பட்ட தோழர்கள் வி.அந்தோணி முத்து, பி.ராஜா நினைவு ஜோதியை நகர்குழு உறுப்பினர் பி.ராஜா தலைமை யில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ. குருசாமி பெற்றுக் கொண்டார்.

அல்லம் பட்டியில் இருந்து எடுத்து வரப்பட்ட மத நல்லிணக்கம் மக்கள் ஒற்றுமைச் சுடரை  நகர்குழு உறுப்பினர் ஆர்.விஜயபாண்டி தலைமையில் மூத்த தோழர் தேனிவசந்த னும், சத்திரரெட்டியபட்டியில் இருந்து கொண்டு வரப்பட்ட தீண்டாமை ஒழிப்பு  நீதிச் சுடரை மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.முத்துவேலு தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.லட்சுமியும் பெற்றுக் கொண்டனர். பட்டாசு விபத்துகளில் வெந்து மடிந்த  தொழிலாளர்கள் நினைவு ஜோதியை மாவட்டக்குழு உறுப்பினர் எம்.சி.பாண்டி யன் தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.என்.தேவா பெற்றுக் கொண்டார்.

பின்பு பிரதிதிநிதிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் முழக்கமிட்டவாறு, மூளிப்பட்டி அரண்மனை பகுதியில் இருந்து பழைய பேருந்து நிலையம், புல்லலக்கோட்டை சாலை வழியாக மாநாட்டு அரங்கத்திற்கு ஊர்வலமாகச் சென்றனர். அங்கு நடைபெற்ற பொது மாநாட் டிற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். முத்துக்குமார் தலைமை வகித்தார். செங் கொடியை மாவட்ட செயற்குழு உறுப்பினர்  ஜி.வேலுச்சாமி ஏற்றி வைத்தார். அஞ்சலித் தீர்மானத்தை மாவட்ட செயற் குழு உறுப்பினர் கே.முருகன் முன் மொழிந் தார். வரவேற்புக்குழு செயலாளர் எல்.முருகன் வரவேற்புரையாற்றினார். மாநாட்டை துவக்கி வைத்து மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி பேசினார்.