districts

img

ஆலங்குளம் அரசு சிமெண்ட் ஆலையை புனரமைப்பு செய்திடுக! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விருதுநகர் மாவட்ட மாநாடு வலியுறுத்தல்

விருதுநகர், டிச.8- அரசு சிமெண்ட் ஆலையான ஆலங்குளம் சிமெண்ட் ஆலையை  புனரமைப்பு செய்து இளைஞர் களுக்கு வேலைவாய்ப்புகளை வழங் கிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விருதுநகர்  மாவட்ட 24 வது மாநாடு வலியுறுத்தி யுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் விருதுநகர் மாவட்ட மாநாடு டிசம்பர் 6, 7, 8 ஆம் தேதிகளில் விருதுநகரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

விருதுநகர் மாவட்டத்தின் முக்  கிய தொழில்களாக உள்ள பட்டாசு,  அச்சு, தீப்பெட்டி ஆகிய தொழில்  கள் ஒன்றிய பாஜக அரசின் தவ றான பொருளாதாரக் கொள்கை களால் கடும் நெருக்கடியைச் சந்  தித்து வருகிறது. எனவே, இத்தொழில்  களை பாதுகாக்க வேண்டும்.

பெட்ரோல் டீசல் விலைகளை குறைக்க வேண்டும். திருமங்கலம் சுங்கச் சாவடியை அகற்ற வேண் டும். நலவாரிய ஆன்-லைன் பதிவு களை எளிமைப்படுத்த வேண்டும்.  ஓட்டுநர்களை கொலைக் குற்ற வாளிகளாக பதிவு செய்யும் சட்டங்  களை ரத்து செய்ய  வேண்டும்.  

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறு நீரகப் பிரிவு, தீவிர இருதய சிகிச்  சைப் பிரிவு, குடல் பிரிவு, புற்று நோய் சிகிச்சை பிரிவு, தலைக்காய  சிகிச்சை பிரிவு, மூளை மற்றும் நரம்பியல் பிரிவு, பி.எஸ்.சி நர்சிங்  ஆகியவற்றை துவங்கிட வேண்டும்.

மதுரையிலிருந்து நெல்லை, தூத்துக்குடி, திருச்செந்தூர், செங்கோட்டை ஆகிய பகுதி களுக்கு மெமு ரயில் இயக்க வேண்டும்.

விருதுநகர் மாவட்ட விளை யாட்டு அரங்கில் விளையாட்டு வீரர்  களுக்கான தங்குமிடம் கட்ட வேண்  டும்.

பெண் குழந்தைகளின் திரு மணங்களை தடுத்து நிறுத்த மாவட்ட நிர்வாகமும், தமிழக அர சும் கடும் நடவடிக்கை எடுப்ப தோடு, விழிப்புணர்வு பிரச்சாரங் கள் செய்ய வேண்டும். கட்டுமானப்  பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி யை குறைக்க வேண்டும். சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் வகை யில் அருப்புக்கோட்டை, திரு வில்லிபுத்தூர் ஆகிய பகுதிகளில் விநாயகர் ஊர்வலத்தின் போது  பதற்றத்தை திட்டமிட்டு ஏற்படுத்தி  வருவோருக்கு ஆதரவாக மாவட்ட  நிர்வாகம் உள்ளது. இதை போக்கி,  மக்கள் ஒற்றுமையை பலப்படுத்த வேண்டும்.

இபிஎப் மூலம் பென்சன் பெறும் பஞ்சாலை தொழிலாளர்களுக்கு ரூ.9ஆயிரம் மாதம் வழங்க வேண்  டும். குறைந்தபட்ச கூலி ரூ.544 வழங்க வேண்டும்.

நகராட்சிகளில் அளவுக்கு அதி கமாக சொத்து வரி வசூலிக்கப்படு கிறது. இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஆயத்த ஆடை  உற்பத்தி செய்யும் தொழிலாளர் களுக்கு இஎஸ்ஐ, பி.எப் பிடித்தம் செய்ய வேண்டும். கூட்டுறவு தையல் தொழிலாளர்களுக்கு கூலி  உயர்வு வழங்க வேண்டும்.

உதவித் தொகை கோரி காத்தி ருக்கும் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட அனைவருக்கும் உடனடியாக வழங்க வேண்டும். மாநகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் தனி யார்மயத்தை ரத்து செய்ய வேண்  டும். ஊராட்சிகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சிறப்பு கால முறை ஊதியம், ஓய்வூதியம், சர்வீஸ் தொகை வழங்கிட வேண்  டும்.

100 நாள் வேலைத் திட்டத்தில் முறைகேடாக ஜேசிபி இயந்திரம் பயன்படுத்துவதை தடுக்க வேண் டும்.

வெம்பக்கோட்டையில் அரசு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். விசைத்தறிக்கு போடப்  பட்ட ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய  வேண்டும். காஸ் பேன்டேஜ் ரகத்  திற்கு ஏற்கனவே வழங்கியது போல் ஊக்கத் தொகை வழங்க  வேண்டும். பஞ்சு இறக்குமதிக்கான  வரியை ரத்து செய்ய வேண்டும்.  மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி யில் வன விலங்குகளை கட்டுப் படுத்தி விவசாயத்தை பாதுகாக்க வேண்டும். விலங்குகளால் உயிர் பலியாவோருக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். விருதுநகர் அல்லம்பட்டி  பகுதி யில் மின்மயானம் அமைக்க வேண்  டும் என்பன உள்ளிட்ட பல்வேறு  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மூத்த தோழர்கள் கௌரவிப்பு

முன்னதாக மாநாட்டில் கட்சி யின் மூத்த தோழர்கள் சேத்தூர்  எஸ்.செல்லப்பிள்ளை (94), டி. நீராத்திலிங்கம்(76), ஜே.லாசர் (76), ஜே.லாசர்(80), பி.பால்ராஜா(80), வி.வி.இருளன்(80), எஸ்.கே.ராஜேந்திரன் (78), ஆறுமுகம் (78), நாராயணன் (87) ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

அவசர காலங்களில் உயிருக்கு போராடி வருவோருக்கு ரத்தம்  தேவையெனில் உடனே ஏற்பாடு களை செய்து வரும் விருதுநகர் மாரிமுத்து, சிவகாசி விக்டர், இராஜ பாளையம் முருகானந்தம், பகிர்வு  அறக்கட்டளையின் சரவணன், ஆலமரம் அமைப்பின் புஷ்பராஜ் ஆகியோருக்கு பாராட்டும் நினை வுப் பரிசும் வழங்கப்பட்டது.

மேலும், அதிக முறை இரத்த தானம் செய்த ஜே.எல்.ஸ்டாலின்,  ஜெ.ஜே.சீனிவாசன், காளிராஜன்,  கே.ஜெயக்குமார், எம்.சுந்தர பாண்டியன் ஆகியோருக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. தீக்கதிர் விநியோகம் செய்யும் முகவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து பிரதிநிதி கள் மாநாடு தொடங்கியது. எம்.முத்துக்குமார், எம்.திருமலை, எம்.சாராள் ஆகியோர் தலைமை தாங்கினர். அஞ்சலி தீர்மானத்தை கே.முருகன் முன்மொழிந்தார். அரசியல் ஸ்தாபன அறிக்கையை மாவட்டச் செயலாளர் கே.அர்ஜூ னன், வரவு-செலவு அறிக்கையை மாவட்ட செயற்குழு உறுப்பினர்  எம்.முத்துக்குமார் ஆகியோர் சமர்ப்பித்தனர். அதைத்தொடர்ந்து பிரதிநிதிகள் விவாதம் நடைபெற் றது. 

பேரணி

மாநாட்டின் நிறைவாக கச்சேரி  சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி முன்பிருந்து பேரணி துவங்கி யது. செந்தொண்டர்கள் அணி வகுக்க, 24வது மாநாட்டை பறை சாற்றும் வகையில் 24 செங்கொடி களை போக்குவரத்து அரங்கத் தோழர்கள் முன்னெடுத்துச் சென்ற னர். அவர்களைத் தொடர்ந்து தலை வர்கள் முன்னணியாய் செல்ல, மாவட்டம் முழுவதும் வந்திருந்த ஏராளமான மார்க்சிஸ்ட் கட்சியின் தொண்டர்கள் ஏகாதிபத்தியம் தகர்ப்போம், சோசலிசம் வெல்லட் டும், பாசிசத்தை வேரறுப்போம் என உரக்க கோஷமிட்டபடி ஊர்வ லத்தில் வந்தனர்.

மெயின் பஜார், தெற்குரதவீதி, மேற்குரதவீதி வழியாக தோழர் சீத்தாராம்யெச்சூரி நினைவுத் திடலில்  (தேசபந்து மைதானத்தில்) பேரணி நிறைவடைந்தது. அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் எல்.முருகன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஏ.குருசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.அர்ஜூனன், மாநிலக்குழு உறுப்பினர் எம்.மகாலட்சுமி ஆகி யோர் முன்னிலை வகித்தனர். நகர்  செயலாளர் எம்.ஜெயபாரத் வர வேற்புரையாற்றினார். மத்தி யக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். நூர்முகமது, மதுரை மக்களவை உறுப்பினரும், மாநில செயற்குழு  உறுப்பினருமான சு.வெங்கடேசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முடிவில் மாவட்டக்குழு உறுப்பி னர் என்.உமாமகேஸ்வரி நன்றி கூறி னார்.

மேலும் இதில், மாவட்ட செயற்  குழு, மாவட்டக்குழு, இடைக்குழு உறுப்பினர்கள் மற்றும் கிளைச் செயலாளர்கள் உட்பட ஏராளமா னோர் பங்கேற்றனர்.