districts

img

பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய பாஜக அரசை கண்டித்து சிபிஎம் போராட்டம்

விருதுநகர், ஏப்.2- பிரதமர் நரேந்திரமோடி தலைமை யிலான ஒன்றிய பாஜக அரசானது, சாதாரண ஏழை, எளிய மக்கள் பயன் படுத்தி வரும் சமையல் எரிவாயுவின் விலையை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  எனவே, உயர்த்தப்பட்ட சமையல் எரிவாயு, பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை ரத்து செய்யக் கோரி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில மாநாடு அறைகூவல் விடுத்தது. இந்நிலையில், விருதுநகர் மாவட்  டத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப் பாட்டங்கள் நடைபெற்றன. அருப்புக் கோட்டையில் ஆட்டோக்களை கயிறு மூலம் கட்டி இழுத்து வந்து ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத் திற்கு நகர் செயலாளர் எஸ்.காத்த முத்து தலைமையேற்றார். துவக்கி வைத்து சிஐடியு கன்வீனர் தமிழ் செல்வராஜ் பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.தாமஸ்  கண்டன உரையாற்றினார். இதில் கணபதி, சுப்பிரமணி, ரவி உள்ளிட் டோர் பங்கேற்றனர். வெம்பக்கோட்டை வட்டம், ஆலங் குளத்தில் ஒன்றிய செயலாளர் முனிய சாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.குருசாமி கண்டன உரையாற்றினார். இதில் முத்து, முத்துராமலிங்கம் உள்ளி டோர் பங்கேற்றனர். காரியாபட்டியில் நடைபெற்ற போராட்டத்திற்கு வட்டக் குழு உறுப்பி னர் பி.மலைச்சாமி தலைமை தாங்கி னார். துவக்கி வைத்து வட்ட செயலா ளர் ஏ.அம்மாசி பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.முத்துக் குமார் கண்டன உரையாற்றினார். மேலும் இதில் ஆறுமுகம், முகமது அலி ஜின்னா, எம்.பரமசிவம் உள் ளிட்டோர் பங்கேற்றனர். மேட்டமலையில் ஒன்றியக் குழு  உறுப்பினர் கருப்பசாமி தலைமையில் மூத்த தலைவர் கே.சுப்பாராஜ் துவக்கி வைத்தார். ஒன்றியச் செய லாளர் எஸ்.சரோஜா விளக்கிப் பேசி னார். மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் அ.விஜயமுருகன் கண்டன உரை யாற்றினார். இதில், மனோஜ்குமார், மாரிச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.

தேனி 
தேனி பழைய பேருந்து நிலையம் அருகில் எரிவாயு உருளைக்கு மாலை அணிவித்தும், ஆட்டோவை கயிறு கட்டி இழுத்தும் நடைபெற்ற நூதன போராட்டத்திற்கு தாலுகா செயலா ளர் இ.தர்மர் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சி. முருகன் விளக்கிப் பேசினார். மாவட் டக் குழு உறுப்பினர் டி.ஜெயபாண்டி, தாலுகாக்குழு உறுப்பினர்கள் ஏ.சி.காமுத்துரை, அப்பாஸ் மந்திரி, மா. காமுத்துரை, சரஸ்வதி, மாதா, எஸ்.கண்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
போடி
போடி கட்டபொம்மன் சிலை அருகே எரிவாயு உருளைக்கு மாலை அணிவித்து, பத்தி, சூடம் பற்ற வைத்து நடைபெற்ற நூதன போராட்டத்திற்கு தாலுகாக்குழு உறுப்பினர் எம்.செல்லப்பாண்டி தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சி. முனீஸ்வரன் விளக்கிப் பேசினார். மூத்த தலைவர்கள் கே.ராஜப்பன், எல்.ஆர்.சங்கரசுப்பு, தாலுகாக்குழு உறுப்பினர்கள் பி.சந்திரசேகர், ஆர். தங்கபாண்டி, எஸ்.மீனா, செல்லத் துரை, கருப்பசாமி, சிஐடியு தலை வர்கள் நாகராஜ், விருமாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கடமலைக்குண்டு
மயிலாடும்பாறையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் கடமலை-மயிலை ஒன்றிய செயலா ளர் போஸ் தலைமை தாங்கினார். விவ சாயிகள் சங்க தேனி மாவட்ட செய லாளர் கண்ணன் கலந்து கொண் டார். ஆர்ப்பாட்டத்தில் விவசாய தொழிலாளர்கள் சங்க ஒன்றிய செய லாளர் பெருமாள், ஒன்றியக்குழு உறுப்பினர் ராமசாமி, மேலப்பட்டி முரு கன், ஆறுமுகம் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.