districts

img

தியாகி இமானுவேல்சேகரன் நினைவு கருத்தரங்கம்

விருதுநகர், செப்.10- சாதி ஒழிப்புப் போராளி தியாகி  இமானுவேல் சேகரன் நினைவு கருத்தரங்கம் விருதுநகரில் நடை பெற்றது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் விருதுநகர் எம்.ஆர்.வி நினைவகத்தில் நடை பெற்ற கருத்தரங்கத்திற்கு மாநி லத் தலைவர் த.செல்லக்கண்ணு தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் எம்.முத்துக்குமார், மாவட்டச் செயலாளர் கே.முரு கன், மாவட்ட பொருளாளர் எம். சுப்புராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமுஎகச மாநில செயற்  குழு உறுப்பினர் ச.தமிழ்ச்செல் வன், முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் கருத்துரையாற்றினர். மாவட்ட துணைச் செயலாளர் என். உமாமகேஸ்வரி நன்றி கூறினார். மேலும் இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கே.அர்ஜூனன், முன் னணியின் மாநில செயலாளர் என். கலையரசன், மாநிலக்குழு உறுப்பி னர் எம்.ஊர்காவலன் உட்பட பலர்  பங்கேற்றனர்.
வாழ்த்துச் செய்தி 
தியாகி இமானுவேல் சேகரன்  மகள் சுந்தரி பிரபா ராணி தீண் டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் நடைபெறும் தியாகி இமானுவேல் சேகரன் நினைவு கருத்தரங்கம் வெற்றி பெற வேண்டும் என வெள்ளியன்று வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார்.