விருதுநகர், நவ.26- விருதுநகரில் போதிய முன்னேற்பாடு ஏதுமின்றி நிலம் தொடர்பான குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதனால் மனு அளிக்க வந்த பொதுமக்கள் பெரும் அவதிப்பட்ட னர். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிலம் தொடர்பான குறைதீர் கூட்டம் செவ்வாயன்று நடை பெறும் என முன்கூட்டியே மாவட்ட நிர்வாகத்தால் அறி விக்கப்பட்டது.
இதனால், இலவச வீட்டுமனைப்பட்டா, குடி யிருக்கும் வீட்டிற்கான பட்டா, நிலத்திற்கான பட்டா பெற என மாவட்டம் முழுவதுமிருந்து ஏராளமான பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்தனர். மேலும், தமிழக முதல்வர் கடந்த நவம்பர் 10 இல் நடை பெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 40 ஆயிரம் பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கினார். அதில் பலருக்கு சரியாக பதிவு செய்யப்படவில்லை. எனவே, அப்பயனாளிகளும் குறைதீர் கூட்டத்திற்கு வந்திருந்த னர்.
இந்நிலையில், பொதுமக்கள் கொண்டு வந்த மனுக்களை பெற்று அதை பதிவு செய்ய நீண்ட நேரம் ஆனது. மேலும், பதிவான மனுக்களை உரியவரிடம் ஒப்படைப்பதிலும் பெரும் சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில், வருவாய்த்துறை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பணி புறக்க ணிப்பு போராட்டமும் நடைபெற்றது. இதன் காரணமாக, குறைதீர் கூட்டத்தில் வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வா ளர்கள் உட்பட பலர் வரவில்லை. இதனால், கொடுத்த மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா என பொதுமக்கள் யோசிக்கும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், மதியம் 1 மணிக்கு பின் கோரிக்கை மனுக்களை பெற மாட்டோம் என அங்கிருந்த அலுவ லர்கள் தெரிவித்தனர். இதனால், கால்கடுக்க காத்திருந்த மக்கள் ஆவேசமடைந்தனர். உடனடியாக, மாவட்ட ஆட்சி யரை சந்திக்கப் போகிறோம் என புறப்பட்டனர். பின்பு, அவர்களை சமாதானப்படுத்திய அலுவலர்கள் மீண்டும் மனுக்களை பெற்றனர்.