விருதுநகர், டிச. 9- தன் நண்பனுக்கு ஒன்றென்றால் தசை துடிக்கும் என்பது போல, அதானியைப் பற்றி பேசினால் மோடியின் உயிர் துடிக்கும் என விருதுநகரில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் 24 ஆவது மாவட்ட மாநாடு நிறைவு பொதுக் கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் சு. வெங்கடேசன் எம்.பி., பேசினார்.
அப்போது அவர் பேசிய தாவது: விருதுநகர் மாவட்டத்தின் முக்கியத் தொழிலாக பட்டாசுத் தொழில் உள்ளது. இத்தொழில் குறித்த கொள்கையை உருவாக்க முடியாதா? பட்டாசு வெடிப்ப தால்தான் காற்று மாசுபடுகிறதா? எனக் கேள்வி எழுப்பினார். தெருமுனையில் நின்று சுதந்திரமாக சாமானியன் எதை வேண்டுமானாலும் பேச முடியும். ஆனால், நாடாளுமன்றத்தில் பேச உரிமை இருக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது. இன்றைக்கு வரை நாடாளுமன்றத்தில் அதானி என்று யாரும் பேச முடியாது.
அப்படி பேசி னால் மைக் தானாக ஆஃப் ஆகி விடும். அப்படி ஒரு சிஸ்டத்தை மோடி உருவாக்கி வைத்துள்ளார். நண்பனுக்கு ஒன்றென்றால் சதையெல்லாம் துடிக்கும் என்பது போல அதானியை பற்றி பேசினால் மோடிக்கு தசை துடிக்காது, உயிர் துடிக்கும். அதானி ஊழல் பற்றி அமெரிக்காவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதானி ஊழல் குறித்து இந்திய புலனாய்வு மற்றும் சட்ட அமைப்புகள் என்ன செய்து கொண்டிருக்கிறது. அதானி ஊழல் விவகாரம் பற்றி பேச வேண்டும் என்பதற்காக 8 நாட்கள் நாடாளுமன்றம் முடங்கி யது. ஆனால், ரூ.200 கோடியை எதிர்கட்சிகள் வீணாக்கி விட்டதாக பாஜக-வினர் திசை திருப்பும் வேலையை செய்கின்றனர்.
சூடத்திற்கு ஜி.எஸ்.டி
இந்திய வரலாற்றிலேயே, கட வுளின் முன்னால் வழிபாட்டுக்காக பயன்படுத்தப்படும் கற்பூரத்திற்கு 12 சதவீதம் வரி விதித்த ஒரே அரசு பாஜக அரசுதான். இவர்கள்தான் ஆன்மீகத்தை பேசுகிறார்கள். 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்திய தேசத்தை வெறும் 130 பெரும் பணக்காரர்களுக்கான தேசமாக மாற்றும் வேலையை மோடி செய்து கொண்டிருக்கிறார்.
அதானிக்கும் அம்பானிக்கும் மொத்தக் கடையை பாஜக அரசு திறந்து வைத்துள்ளது. இதனை மடைமாற்றுவதற்கு மதவெறி, சாதி வெறி, வகுப்பு வாதத்தை பாஜக கையில் எடுத்து வருகிறது.
சமஸ்கிருத பெயர்கள்
இதுவரை இல்லாத அள விற்கு இந்த ஆண்டு 0.4 சதவீதம் கல்விக்கு குறைவான நிதியை ஒன்றிய அரசு ஒதுக்கி உள்ளது. பொருளாதார தாக்குதலை நடத்தி வருகிறது. மாநிலங்களவையில் ‘விமானத் துறை சட்டம்’ என்று இருந்ததை ‘பாரதிய வாயுயான் விதேயக்’ (புதிய விமான போக்கு வரத்து மசோதா) என சமஸ்கிரு தத்திற்கு மாற்றி நிறைவேற்றப்பட்டு உள்ளது.
ஏறக்குறைய 60 சட்டங் கள் மற்றும் அரசின் திட்டங்கள் இந்தி, சமஸ்கிருதம் பெயரில் மாற்றப் பட்டுள்ளன. மேலும், பல சட்டங்களின் பெயர்களை இந்தி, சமஸ்கிரு தத்தில் மாற்றியுள்ளனர். எனவே, ஒன்றிய மோடி அரசு அரசியல் சாச னத்தை சிதைக்கும் வேலையை செய்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.