விருதுநகர், நவ.24- பழைய ஓய்வூதியத் திட் டத்தை ரத்து செய்ய வேண் டும். 70 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியர்களுக்கு 10 சதவீத ஓய்வூதியம் கூடுத லாக வழங்கிட வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்கிட வேண் டும். பணமில்லா மருத்துவ காப்பீடு திட்டத்தை உறுதி செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழ் நாடு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இப்போராட் டத்திற்கு மாவட்டத் தலை வர் வெ.குருசாமி தலைமை யேற்றார். கிளைத் தலைவர் ஜெகதீசன், கிளைச் செயலா ளர் டேவிட் ஆகியோர் முன் னிலை வகித்தனர். துவக்கி வைத்து கூட்டமைப்பு செய லாளர் கா.சிவபெருமான் பேசினார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செய லாளர் ராமசுப்புராஜ் பேசி னார். போராட்டத்தை ஆத ரித்து இரா.ஸ்ரீனிவாசன், வேலுச்சாமி, செல்வகணே சன், போத்திராஜ், சந்திர ராஜன், எம்.பெருமாள்சாமி ஆகியோர் பேசினர்.
முடிவில் சிஐடியு மாநிலச் செயலாளர் எம்.மகாலெட் சுமி சிறப்புரையாற்றினார். மாவட்ட பொருளாளர் அ. மாரியப்பன் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத் தில் அரண்மனை வாயிலில் தர்ணா போராட்டம் நடை பெற்றது. மாவட்டத் தலை வர் பா.வடிவேலு தலைமை தாங்கினார். ஓய்வூதிய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் கோவிந்தராஜன் துவக்க உரையாற்றினார். அரசு ஊழியர் சங்க முன் னாள் மாநில துணைத் தலை வர் எம்.மெய்யப்பன், மாநில செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். காரைக்குடி வட்டக் கிளை துணைத் தலைவர் அரிய முத்து, சிவகங்கை வட்டக் கிளை செயலாளர் பாண்டி ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினர். மாவட்ட துணை தலைவர் உதயசங் கர் நன்றி கூறினார்.
இராமநாதபுரம்
இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத் திற்கு மாவட்டத் தலைவர் ஜி. கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட பொரு ளாளர் எஸ்.முருகேசன் வர வேற்றார். பி.எஸ்.விஜயராக வன் விளக்க உரையாற்றி னார். மின்வாரியம்- டி.ராமச் சந்திரபாபு, போக்கு வரத்து - எம்.மணிக்கண்ணு ஆகியோர் வாழ்த்துரை யாற்றினர். மாநிலத் துணைத் தலைவர் டி.குப்பன் நிறைவுரையாற்றினார். மாவட்ட இணைச் செயலா ளர் கே.கருப்பையா நன்றி கூறினார்.