districts

img

ஆத்துமேடு பகுதியில் வீட்டுமனைப் பட்டா வழங்கிட வேண்டும் விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

விருதுநகர், நவ.26- விருதுநகர் ஆத்துமேடு பகுதி மக்கள் வீட்டுமனைப் பட்டா வழங்கிடக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலை மையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  கோரிக்கை மனு அளித்தனர். விருதுநகர் நகராட்சி 35வது வார்டுக்கு உட்பட்டது ஆத்துமேடு பகுதி. இங்கு சுமார்  300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. 40 ஆண்டுகளுக்கும் மேலாக குடும்பத்துடன்  பலர் குடியிருந்து வரு கின்றனர்.    

இந்நிலையில், தாங்கள் குடியிருக்கும் வீட்டிற்கான பட்டாவை பெறுவதற்காக  விருதுநகரில் நடைபெற்ற “மக்களோடு முதல்வர்“ முகாமில் மனு அளித்தனர். ஆனால், மனுக்களை விசாரித்த வரு வாய்த்துறையினர், குடியிருப்புகள் உள்ள  இடம் நகராட்சி வரைபடத்தில் வழித் தடம்  என உள்ளது. எனவே, பட்டா வழங்கிட இய லாது எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

எனவே, நகராட்சி சர்வே வரைபடத்தில் வழித் தடம் என உள்ளதை வகை மாற்றம்  செய்து, ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த  குடியிருப்புவாசிகளுக்கு பட்டா வழங்கிட வேண்டுமென  மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் கடந்த பிப்ரவரி முதல் கோரிக்கை மனுக்களை வழங்கி வந்தனர்.    

இதையடுத்து, விருதுநகர் வட்டாட்சி யர் ஆத்துமேடு பகுதியில் உள்ள வீடுகளை அளந்து அறிக்கை தர உத்தரவிட்டார். அதன்பேரில், விருதுநகர் நகர நில அளவையாளர், அனைத்து வீடுகளையும் அளந்து, வட்டாட்சியர் அலுவலகத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளார். இந்நிலையில், ஆத்துமேடு பகுதி குடியிருப்புகளுக்கு விரைவில் பட்டா கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்  என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த னர். இதில், மாநிலக்குழு உறுப்பினர் எம். மகாலட்சுமி, மாவட்ட செயற்குழு உறுப்பி னர் வி.முருகன், மாவட்டக்குழு உறுப்பி னர்கள் எஸ்.வி.சசிக்குமார், முனியாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.