விருதுநகர், ஜூன் 21- விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும். செவிலியர்கள், ஆய் வக ஊழியர்களை அதிகரிக்க வேண்டும். 24 மணி நேரமும் மருத்து வமனையில் மருத்துவர்கள் இருப் பதை உறுதி செய்ய வேண்டும். ஸ்கேன், எக்ஸ்-ரே வசதி, ஜென ரேட்டர் வசதி செய்து தர வேண்டும். நோயாளிகளுக்குத் தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப் படை வசதிகளை செய்து தர வேண் டும் என்று வலியுறுத்தி மர்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்டம் முழுவதும் ஆர்ப்பாட்டங் கள் நடைபெற்றன. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி ஊழியர்கள் மற்றும் தலைவர்கள் மூலம் நேரடியாக ஆய்வு செய்யப்பட்டது. அப்போது கண்டறியப்பட்ட குறைபாடுகளை சீர் செய்யக் கோரி அரசுக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பி வைக்கப்பட் டுள்ளதோடு, போராட்டமும் நடத் தப்பட்டது. சிவகாசி அரசு மருத்துவமனை யில் ஸ்கேன் வசதி இல்லை. இதன் காரணமாக நோயாளிகள் வெளி யில் உள்ள தனியார் ஸ்கேன் மையங் களில் பணம் செலுத்தி ஸ்கேன் எடுக்கும் நிலை உள்ளது. மேலும் எக்ஸ்-ரே எடுக்க ஒரு ஊழியர் மட் டுமே உள்ளார். ஆய்வகங்களில் குறைவான ஊழியர்களே உள்ள னர்.
இதனால், நோயாளிகள் பல மணிநேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ஸ்கேன் வசதி செய்து தர வேண்டும். எக்ஸ்-ரே, ஆய்வ கங்களில் கூடுதலான ஊழியர் களை நியமிக்க வேண்டுமென வலி யுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு கணேசன் தலைமையேற்றார். துவக்கி வைத்து நகர் செயலாளர் ஆர்.சுரேஷ்குமார் பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. முருகன் கண்டன உரையாற்றி னார். மேலும் இதில், நகர்க்குழு உறுப்பினர் இ.பழனி, மூத்த தலை வர்கள் ஜே.லாசர், பி.பால்ராஜா, எஸ்.மாடசாமி உள்ளிட்டோர் பங் கேற்றனர். விருதுநகர் மாவட்டம், திருச்சுழி யில் உள்ள அரசு மருத்துவமனை யில் மருத்துவர்கள் பணியில் சரிவர இருப்பதில்லையென தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன. எனவே, 24 மணி நேரமும் மருத்துவர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். நரிக்குடி, அ.முக்குளம், எம்.ரெட்டியபட்டி, பரளச்சி ஆகிய இடங்களில் உள்ள சுகாதார நிலை யங்களில் கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்கக் கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சுரேஷ் தலைமையேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி. முருகன், மாவட்டக்குழு உறுப்பி னர் பி.அன்புச்செல்வன், வட்ட செய லாளர் மார்கண்டேயன், செல்வ ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். மல்லாங்கிணறு மருத்துவ மனையில் கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்கக் கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பரமசிவம் தலைமையேற்றார். வட்ட செயலாளர் ஏ.அம்மாசி கண் டன உரையாற்றினார். மேலும் இதில், வி.வி.இருளன், ஆறுமுகம், சிவபாக்கியம், பி.மலைச்சாமி, கண் ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விருதுநகர் அருகே அழகாபுரி யில் உள்ள அரசு துணை ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு அரசுப் பேருந்துகள் நிற்க மறுக்கின்றன. இதனால், கர்ப்பிணிப் பெண்கள் பெரும் பாதிப்படைகின்றனர். மேலும், கர்ப்பிணிகள் ஸ்கேன் எடுக்க, விருதுநகர் அரசுத் தலைமை மருத்துவமனைக்கு செல்லும் நிலை உள்ளது. இதனால், அவர்கள் பெரும் அலைக்கழிப்புக்கு உள் ளாகின்றனர். மேலும், ஜெனரேட்டர் வசதி இல்லாத காரணத்தால் பிரச வித்த தாய்மார்கள் மற்றும் குழந்தை கள் கொசுக்கடியால் அவதிப்படும் நிலை உள்ளது. எனவே, இக்குறை பாடுகளை களையக் கோரி கையெ ழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில், வடக்கு ஒன்றிய செயலாளர் ஆர்.முத்துவேலு, மாவட்ட செயற் குழு உறுப்பினர் எஸ்.லட்சுமி, ஒன்றி யக்குழு உறுப்பினர் ஜெ.ஜே.சீனி வாசன், வள்ளியம்மாள், எம்.ஆறு முகம், எஸ்.நாகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆமத்தூர் ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு நடை பெற்ற கையெழுத்து இயக்கத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர் கே. ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங் கேற்றனர். ஆர்.ஆர்.நகர் அருகே உள்ள அம்மாபட்டி ஆரம்ப சுகாதார நிலை யத்தில் தீக்காய சிகிச்சை பிரிவு அமைக்க கோரி நடைபெற்ற போராட்டத்திற்கு குமார் தலைமை யேற்றார். துவக்கி வைத்து தெற்கு ஒன்றிய செயலாளர் பி.நேரு பேசி னார். மாவட்டக்குழு உறுப்பினர் எம்.சி.பாண்டியன் கண்டன உரை யாற்றினார். அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் கூடுதலான மருத்துவர்கள் செவிலியர்கள், தூய்மை பணியாளர்களை நிய மிக்க கோரியும், எம். ஆர். ஐ, சி. டி. ஸ்கேன் 24 மணி நேரமும் செயல்படு வதற்கும் அதற்கு தேவையான ஊழி யர்களை நியமிக்கக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகரச் செயலாளர் எஸ். காத்தமுத்து தலை மையேற்றார். சிஐடியு கன்வீனர் எஸ் தமிழ்ச் செல்வராஜ் துவக்கவுரை யாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.தாமஸ் கண்டன உரையாற்றினார். மேலும் இதில், நகர்க்குழு உறுப்பினர் கே.சுப்பிர மணி, எம். ராஜேந்திரன், ஜி. தவசி முனியாண்டி உள்ளிட்டோர் பங் கேற்றனர். மலைப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆம்புலன்ஸ் வசதி செய்துதரக்கோரி கிளைச்செயலாளர் பூமிராஜ் தலைமையில் மருத்து வரிடம் மனு கொடுக்கப்பட்டது. இதில் ஒன்றிய செயலாளர் எம். கணேசன், ஒன்றியக்குழு உறுப்பி னர் எம்.காமாட்சிநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திருவில்லிபுத்தூர்
திருவில்லிபுத்தூரில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் நகர செயலாளர் வி.ஜெயக்குமார் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் கே. அர்ஜுனன் விளக்கிப் பேசினார். மாவட்டக்குழு உறுப்பினர் எம். திருமலை, ஒன்றிய செயலாளர் சசிகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வத்திராயிருப் பில் ஆர்ப்பாட்டத்திற்கு நகர செய லாளர் பழனிச்சாமி தலைமை தாங்கி னார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் சுந்தரபாண்டியன் விளக்கிப் பேசினார். மாவட்டக்குழு உறுப்பி னர் ஜெயக்குமார் ,ஒன்றிய செயலா ளர் பெனரி உள்பட பலர் கலந்து கொண்டனர். இராஜபாளையம் கிழக்கு ஒன்றியம் சத்திரப்பட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சேகர் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் முனியாண்டி பேசினார் .இராஜபாளையம் நகர் அரசு மகப்பேறு மருத்துவமனை முன்பு நடைபெற்ற போராட்டத் திற்கு நகர்க்குழு உறுப்பினர் சுப்பிர மணியன் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் மகா லட்சுமி விளக்கிப் பேசினார். நகரச் செயலாளர் மாரியப்பன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.