விருதுநகர், டிச.8- மாற்று அரசியல் கொள்கையை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி வலியுறுத்தி னார்.
விருதுநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாவட்ட மாநாடு தோழர் எம்.என்.எஸ். வெங்கட்டராமன் நினைவரங்கில் நடைபெற்றது.
மாநாட்டில் சிறப்புரையாற்றிய உ.வாசுகி பின்வரும் கருத்துக்களை முன்வைத்தார்:
பாலஸ்தீன விவகாரம்
“இந்தியா காலங்காலமாக பாலஸ்தீனத்திற்கு ஆதரவான நிலை யில் இருந்தது. ஆனால், தற்போதைய ஒன்றிய அரசு இஸ்ரே லுக்கு ஆதரவாக செயல்படுகிறது. ஏகாதிபத்திய அமெரிக்காவிற்கு ஆதரவான நிலையை எடுத்து வருகிறது.”
பெட்ரோல், டீசல் விலை உயர்வு
“சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 18 சதவீதம் குறைந்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலை யை ரூ.30 வரை குறைத்திருக்க வேண்டும். ஆனால், ஒன்றிய அரசு அதனை செய்யவில்லை.”
வேலைவாய்ப்பு நெருக்கடி
“நல்ல மதிப்பெண்கள் பெற்றா லும் நிரந்தர வேலை கிடைக்காத நிலை உருவாகியுள்ளது. மருத்து வர்கள், செவிலியர்கள் கூட ஒப்பந்த அடிப்படையில்தான் பணியமர்த்தப் படுகின்றனர். ராணுவத்தில் கூட ஒப்பந்த முறையில் வீரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.”
தமிழக விவசாய நிலை
“சமீபத்திய மழையால் 70 ஆயிரம் கோழிகள் இறந்துள்ளன. கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளன. நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. ஒரு ஏக்கர் நெல் சாகுபடிக்கு ரூ.38,000 செலவாகும் நிலையில், மூன்றில் ஒரு பங்கு பாதிப்புக்கு வெறும் ரூ.6,500 மட்டுமே இழப்பீடாக வழங்கப்படுகிறது.”
புதிய அரசியல் கட்சி
“நடிகர்கள் அரசியலுக்கு வர லாம். ஆனால் சாதி ஆதிக்கத்துக்கும், தீண்டாமைக்கும் எதிரான போராட்டக் களம் கண்டபின் வரவேண்டும். பாசிசத்திற்கும் பாயாசத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் அரசியலுக்கு வர முடியாது.”
இவ்வாறு அவர் பேசினார்.
மாநாட்டில் கௌரவிப்பு
மாநாட்டின் போது கட்சியின் மூத்த உறுப்பினர்கள், இரத்ததான தன்னார்வலர்கள், தீக்கதிர் விநியோகிப்பாளர்கள் உள்ளிட்டோர் கௌரவிக்கப்பட்டனர்.