விருதுநகர், ஜூன் 19- இந்தியா முழுவதும் உள்ள இளை ஞர்களின் கனவை சீர்குலைக்கும் வகை யிலும் ராணுவத்தை ஆர்எஸ்எஸ்மய மாக்கும் வகையிலும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு கொண்டு வந்துள்ள அக்னிபாத் என்ற திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ரத்து செய்யக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. விருதுநகர் மூளிப்பட்டி அரண் மனை முன்பு நடைபெற்ற இப்போராட் டத்திற்கு நகர் செயலாளர் எல்.முரு கன் தலைமையேற்றார். மாவட்ட செய லாளர் கே.அர்ஜூனன் கண்டன உரை யாற்றினார். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.தாமஸ், எம்.முத்துக்குமார், மாவட்டக்குழு, இடைக் குழு உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். திருவில்லிபுத்தூர் தேரடியில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் நகரச் செயலாளர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினரும் தீக்கதிர் பொறுப்பாசிரியருமான எஸ்.பி. இராஜேந்திரன் கண்டன உரை யாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் குருசாமி, சுந்தர பாண்டியன், முருகன், பி. என். தேவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் இராஜபாளையம் நகர் பஞ்சு மார்க்கெட் பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வாலிபர் சங்க நகர தலை வர் கருப்பசாமி தலைமையில் நகர செய லாளர் செந்தமிழ் செல்வன் துவக்கி வைத்தார். மாதர் சங்க நகர தலை வர் மைதிலி, மாணவர் சங்க தாலுகா தலைவர் ஜோவின்சன் பிரபா ஆகியோர் பேசினர். வாலிபர் சங்க மாவட்ட செய லாளர் ஜெயபாரத் நிறைவுரையாற்றினார்.
திண்டுக்கல்
திண்டுக்கல் மாவட்டத்தில் அக்னி பாத் திட்டத்திற்கு எதிராக இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. பழனி ஒன்றியம் நெய்காரபட்டியில் ஊர்வல மும் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. ஒன்றியத்தலைவர் சிவா தலைமை வகித்தார். மாநில துணைச்செயலாளர் சி.பி.போஸ், மாவட்டச்செயலாளர் கே.ஆர்.பாலாஜி, ஒன்றியச்செயலாளர் செயலாளர் முருகன் ஆகியோர் பேசினர். தொப்பம்பட்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியத்தலைவர் காளிமுத்து தலைமை வகித்தார். மாநி லச்செயலாளர் பாலா சிறப்புரை யாற்றினார். மாவட்ட பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட துணைச் செயலாளர் சேதுசிவன். ஓன்றியச்செய லாளர் இளையபாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.