விருதுநகர், டிச.,8- மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் விருதுநகர் மாவட்டச் செயலாளராக ஏ.குருசாமி தேர்வு செய்யப் பட்டார்.
கட்சியின் விருதுநகர் மாவட்ட 24ஆவது மாநாடு தோழர் எம்.என்.எஸ்.வெங் கட்டராமன் நினைவரங்கில் நடைபெற்றது.
மாநாட்டிற்கு எம்.முத்துக் குமார், எம்.திருமலை, எம்.சாராள் ஆகியோர் தலைமை வகித்தனர். மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி துவக்கவுரையாற்றினார். அரசியல் ஸ்தாபன அறிக்கை யை மாவட்டச் செயலாளர் கே.அர்ஜூனன், வரவு-செலவு அறிக்கையை மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எம்.முத்துக்குமார் ஆகி யோர் சமர்ப்பித்தனர்.
மாநாட்டை வாழ்த்தி கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், மதுரை மக்க ளவை உறுப்பினருமான சு. வெங்கடேசன் உரையாற்றி னார்.
புதிய மாவட்டக்குழு தேர்வு
மாநாட்டில் 41 பேர் கொண்ட புதிய மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட் டது. மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகமது நிறைவுரையாற்றினார். மாவட்ட செயலாளராக ஏ. குருசாமி தேர்ந்தெடுக்கப் பட்டார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக கே.அர்ஜூனன், எம்.மகா லட்சுமி, பி.என்.தேவா, எஸ்.லட்சுமி, எம்.முத்துக்குமார், வி.முருகன், எல்.முருகன், எம்.சுந்தரபாண்டியன், கே.முருகன், பி.மாரி யப்பன், எஸ்.வி.சசிக்குமார், ஆர்.பாலசுப்பிரமணியன் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். வரவேற்புக்குழு தலைவர் கே.ஜெயக்குமார் நன்றி கூறினார்.