திருவில்லிபுத்தூர். ஜூன் 21- விருதுநகர் எல்ஐசி காலனியில் வசிப்பவர் பாலமுருகராஜா வயது(48) இவர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு எதிரே நோட்டுப் புத்தகம் விற்கும் கடை வைத்துள்ளார், இவர் கடந்த 16 .7 .2018 அன்று இந்தப் பள்ளியில் 16 வயது பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை அழைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து விருதுநகர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து பாலமுருகராஜாவை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கினை விசாரித்த அமர்வு நீதிபதி கே. பூரண ஜெய ஆனந்த் குற்றம்சாட்டப்பட்ட பாலமுருகராஜாவுக்கு 3 ஆண்டு கள் சிறை தண்டனையும் ரூ.15 ஆயிரம் அபராதம், கட்ட தவறினால் மேலும் ஒரு வருடம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூபாய் இரண்டு லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டார் இந்த வழக்கில் அரசு தரப்பில் குற்றவியல் வழக்கறிஞர் ஜெ. கலா ஆஜரானார்.