விழுப்புரம், ஜூலை 23- விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கிராம நிர்வாக அலுவலருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட குமளம் கிராமத்தை சேர்ந்தவர் அய்யனார் (40), விவசாயி. இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு பட்டா மாற்றம் செய்ய அப்போதைய கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த சீனிவாசன் (35) என்பவரை அணுகி மனு கொடுத்தார். இந்த மனு மீது நடவடிக்கை எடுத்து பட்டா மாற்றம் செய்து தர ரூ.3 ஆயிரத்தை லஞ்சமாக தர வேண்டுமென சீனிவாசன் கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத அய்ய னார், விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு காவல்துறை யிடம் புகார் அளித்தார். அதனைத் தொட ர்ந்து, ரசாயன பொடி தடவிய பணத்தை கிராம உதவியாளரான ரமேஷிடம் கொடுத்தார். அந்த பணத்தை கிராம நிர்வாக அலுவலர் சீனிவாசனிடம் கொடுத்தார். அப்போது இருவரையும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கையும் களவுமாக கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் சாட்சி கள் விசாரணை முடிந்த நிலையில் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி (பொறுப்பு) புஷ்பராணி, குற்றம் சாட்டப் பட்ட சீனிவாசனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராத மும், இந்த அபராத தொகையை கட்ட தவறி னால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்கவும் உத்தர விட்டார். மேலும் ரமேசை இவ்வழக்கில் இருந்து விடுதலை செய்தும் தீர்ப்பு கூறினார்.