புதுக்கோட்டை, பிப்.18 - புதுக்கோட்டை மாவட் டம் கந்தர்வக்கோட்டை அருகே கோமாபுரம் கிரா மத்தைச் சேர்ந்தவர் பாஸ்க ரன்(55). இவரை கடந்த 2019 இல் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத் ததாக புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் கைது செய்த னர். புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப் பட்டு வந்த இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட பாஸ்கர னுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்ப ளிக்கப்பட்டது. பாதிக்கப் பட்ட சிறுமிக்கு அரசு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் எனவும் நீதிபதி சத்யா தீர்ப்ப ளித்தார். இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் யோகமலர் வாதாடினார்.