கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து பெரும் துயரத்துக்குள்ளாகி யுள்ளனர். இந்நிலையில், அவர்கள் விரைவில் மீண்டுவர வேலூர் விஐடி பல்கலைக்கழகம் சார்பில் கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயனை தலைமைச்செயலகத்தில் சந்தித்து விஐடி பல்கலைக்கழக வேந்தர் டாக்டர்.கோ.விசுவநாதன் ரூபாய். 1 கோடிக்கான வரைவோலையை வழங்கினார். விஐடி துணைத் தலைவர் சங்கர் விசுவநாதன், டாக்டர். ஜி.வி.செல்வம், உதவி துணைத் தலைவர் காதம்பரி ச.விசுவநாதன் ஆகியோர் உடன் உள்ளனர்.