வேலூர், ஜூலை 16- விஐடி வேலூர் மற்றும் அமெரிக்காவில் உள்ள வாண்டர் பில்ட் பல்கலைக்கழகம், சான் அன்டோனியோவில் உள்ள டெக்சாஸ் பல்கலைக் கழகம், டல்லாஸில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகம் மற்றும் நார்த் டெக்சாஸ் பல்கலைக்கழகம் உள்ளிட்ட புகழ்பெற்ற அமெரிக்க பல்கலைக் கழகங்களுடன் கல்வி மற்றும் ஆராய்ச்சி யில் ஈடுபட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத் திட்டுள்ளன.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் விஐடி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் அமெரிக்க பல்கலைக் கழகங்களுக்கு கூட்டு ஆராய்ச்சி மற்றும் கற்பித்த லுக்கு செல்வார்கள், அமெரிக்க பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்களும் கூட்டு ஆராய்ச்சி மற்றும் கற்பித்த லுக்கு விஐடிக்கு வர இந்த ஒப்பந்தம் வழிவகை செய்கிறது. இது குறித்து விஐடி வேந்தர் டாக்டர் கோ. விசுவநாதன் கூறுகையில், “புகழ்பெற்ற அமெரிக்க பல்கலைக்கழகங்களுடன் இணைவதில் விஐடி பெருமிதம் கொள்கிறது.
இது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான அதிநவீன தொழில்நுட்பங்களை விஐடி மற்றும் அமெரிக்க பல்கலைக்கழகங்கள் பயன்படுத்தி ஆராய்ச்சி செய்வார்கள்”என்றார். புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் விஐடி வேந்தர் டாக்டர் கோ.விசு வநாதன் மற்றும் விஐடி சர்வதேச உறவுகள் துறை இயக்குநர் டாக்டர் ஆர்.சீனி வாசன், அமெரிக்க நார்த் டெக்சாஸ் பல்கலைக் கழகத்துடன் கையெழுத்திட் டனர்.