districts

வேலூர் நறுவீ மருத்துவமனையில் ஆரோக்கியமான இந்தியா திட்டம் துணை முதல்வர் தொடங்கி வைக்கிறார்

வேலூர், டிச.5 - வேலூர் நறுவீ மருத்துவமனை சார்பில் மக்களின் ஆரோக்கியத்தில் நீண்ட கால மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு முன்னோடி முயற்சியாக, “ஹெல்தி இந்தியா, ஹேப்பி இந்தியா” திட்டத்தை டிச.7 (சனிக்கிழமை) துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

மக்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த வும், ஆரோக்கியமான வாழ்க்கை முறை யின் முக்கியத்துவத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கவும், அது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்தத் திட்டம் தொடங்கப்படுகிறது.  இதில் அமைச்சர்கள் துரைமுருகன், ஆர்.காந்தி, மா.சுப்பிரமணியன், மக்களவை, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

மாதந்தோறும் அனைவரும் பங்கேற்கக் கூடிய வகையில் மக்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறை பற்றிய தலைப்புகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காணொலி கருத்தரங்கங்கள் வருடம் முழுவதும் நடத்தப்படும். தமிழ்நாடு அரசின் மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தை செயல்படுத்தும் வகையில் நறுவீ மருத்துவமனை இணைந்து செயல்படும் என்று நறுவீ மருத்துவமனை தலைவர் ஜி.வி. சம்பத் தெரிவித்துள்ளார்.