districts

img

உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு முன்னேற்றம்: துணை முதல்வர் பெருமிதம்

வேலூர், டிச.7 - வேலூர் நறுவி மருத்துவமனை சார்பில் "ஹெல்தி இந்தியா, ஹேப்பி இந்தியா" நிகழ்ச்சியை துணை முதலமைச்சர் உதய நிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

 மக்களின் ஆரோக்கியத்தில் நீண்ட கால மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு முன்னோடி முயற்சியாகவும், மக்களின் ஆரோக்கியம் மற்றும் நலனை மேம்படுத்தவும். ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் முக்கியத்துவத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கவும் அது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இத்திட்டம் துவக்கப்பட்டது. திட்டத்தை தொடங்கி வைத்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், தமிழ்நாட்டின் சுகாதாரத்துறை அனைத்து துறைகளை காட்டிலும் சிறப்பாக செயல்படுகிறது.

இதை நிதி ஆயோக்கும் பாராட்டி உள்ளது. இந்தியாவிலேயே சுகாதாரத் துறையில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது என்றார். தமிழ்நாட்டில் உடல் உறுப்புகள் தானமாக அளிப்பவர்களுக்கு அரசு மரி யாதையுடன் உடல்கள் நல்லடக்கம் என அரசு அறிவித்த பின்னர் உடல் உறுப்பு களை தானம் செய்வோரின் எண்ணிக்கை மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் 42 விழுக்காடு அதிகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, மா.சுப்பிரமணியன் மற்றும் நறுவி மருத்துவமனை நிர்வாக இயக்குநர் ஜி.வி.சம்பத், இந்து என்.ராம், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மருத்துவமனை துணைத் தலைவர் அனிதா சம்பத், செயல் இயக்குநர் பால் ஹென்றி பொதுமேலாளர் நிதின் சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.