வேலூர், டிச.10 - விஐடி பல்கலைக்கழகத்தில் தென்னிந்திய அளவில் பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான மேஜை பந்து போட்டி தொடக்க விழா விஐடி வேந்தர் டாக்டர்.கோ.விசுவநாதன் தலைமை யில் நடைபெற்றது. விழாவில் பேசிய விஐடி வேந்தர் கோ.விசுவநாதன்,
இந்த போட்டி யில் தென்னிந்திய அளவில் 103 பல்கலைக்கழகங்கள் சார்ந்த வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதுபோன்ற விளை யாட்டுப்போட்டிகளில் பங்கேற்பதன் மூலம் நாம் வாழ்க்கையில் பக்குவம் அடைய முடியும், வெற்றி, தோல்விகளை சமமாக பாவிக்க முடியும். விளையாட்டு வீரர்கள் பொதுவாகவே யாரையும் எதிரிகளாக கருத மாட்டார்கள், அனைவரையும் சமமாக அரவணைத்து செல்வார்கள். அதேபோல் விஐடி விளையாட்டுக்கு அதிக கவனம் செலுத்தும் என்றார். சிறப்பு விருந்தினராக திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் ஆறுமுகம் பங்கேற்றார்.
தொடக்க விழாவிற்கு விஐடி துணைத் தலைவர் சங்கர் விசுவநாதன், உதவி துணை தலைவர் காதம்பரி ச.விசுவநாதன், இணைத்துணை வேந்தர், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். போட்டிக்கான ஏற்பாடு களை விஐடி விளையாட்டுத்துறை இயக்கு நர் தியாகச் சந்தன் உள்ளிட்ட பலர் மேற்கொண்டனர்.