வேலூர்,ஏப் 28- வேலூர் மாவட்டம் கீழ்வழித்துணையான் குப்பம் வட்டம் முருக்கம் பட்டு ஊராட்சிக்குட்பட்ட மகமதுபுரம் கிராமத்தில் வசிக்கும் 150க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கடந்த 2002ஆம் ஆண்டு கீ.வ.குப்பம் ஊராட்சிக்குட்பட்ட எல்லைப் பகுதியில் வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப் பட்டன. இப்பகுதியில் வசிக்கும் உயர் வகுப்பினர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இங்கு இடம் ஒதுக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சிலர் அவர்கள் வீடு கட்டுவதற்காக வைக்கப்பட்ட வாசக்கால் களையும், அளவீடு செய்து நடப்பட்ட கற்களையும் பிடுங்கி எறிந்து மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து வருவாய், காவல்துறை மற்றும் ஊராட்சி ஒன்றி யம் என பல இடங்களில் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் அம்மக் கள் உயிருக்கு பயந்து அங்கு யாரும் வீடு கட்ட செல்ல வில்லை. தற்போது 20 ஆண்டு களை கடந்துள்ள நிலையில் அம்மக்களுக்கு மீண்டும் வீடு கட்ட வழங்கப்பட்ட இடத்தில் ஏற்கனவே வழங்கப்பட்ட பட்டாவின் அடிப்படையில் நிலத்தை அளவீடு செய்து தரக்கோரி, 50க்கும் மேற்பட்ட பொது மக்கள் முன்னாள் ஊராட்சி தலைவர் சரவணன் தலை மையில் கீ.வ.குப்பம் வட்டாட்சியர் சரண்யாவிடம் வியாழனன்று (ஏப்.28) கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட வட்டாட்சியர் ஒரு வார காலத்திற்குள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.