districts

img

காட்பாடியில் முன்னாள் படைவீரர்கள் ஆர்ப்பாட்டம்

வேலூர், செப்.23 - வேலூர் மாவட்டத்தில் உள்ள 75 ஆயிரம் முன்னாள் படைவீரர்கள் பல முறை தமிழக முதல்வர், ஆளுநர் மற்றும் அரசு அதிகாரிகளை சந்தி த்தும் மனு அளித்தும் கோரிக்கைகள் நிறை வேற்றாததால், தமிழக அரசு உடனடியாக நிறை வேற்ற வலியுறுத்தி காட்பாடி-சித்தூர் பேருந்து நிலையத்தில், முன்னாள் முப்படை ராணுவ வீரர்கள் அனைத்து சங்கங்களின் ஒருங்கிணைப்புகுழு சார்பில் சிவக்குமார் தலை மையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஒருங்கிணைப் பாளர் ஜம்புலிங்கம் மற்றும் ஏழுமலை உள்ளிட்ட திரளான முன்னாள் படைவீரர்கள் பங்கேற்ற னர். காட்பாடியிலுள்ள முன்னாள் ராணுவ வீரர்க ளின் மருத்துவமனை மற்றும் உணவகம் செல்லும் வழிக்கு சாலை அமைக்க வேண்டும். வேலூர் மாவட்டத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளி துவங்க வேண்டும், முன்னாள் படைவீரர்கள் நலனை கருதி ஜவான் பவன் அமைத்து தர வேண்டும்.  முன்னாள்படை வீரர்க ளுக்கு வீட்டு வரி,சுங்கவரி ஆகியவைகளிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். வேலூர் அருகாமையில் இசி.எச். எம் பேனல்டு மருத்துவமனை அமைக்க வேண்டும் என்றும் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலி யுறுத்தினர்.