வேலூர், மே 26 - வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கொரோனா காலத்தில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டது. இதில் 40 மருத்துவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்பட்ட னர். கொரோனா தொற்று பாதிப்பு குறைந்ததால் இந்த மருத்து வர்கள் அனைவரும் கடந்த மார்ச் மாதம் முதல் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஜனவரி மாதம் முதல் தொடர்ந்து 3 மாதங்கள் இந்த மருத்துவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட வில்லை. இந்நிலையில் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை முதல்லர் அலுவலகம் முன்பு மருத்துவர்கள் வியாழனன்று (மே 26) போராட்டத்தில் ஈடுபட்டனர்.