districts

img

அடிப்படை கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

வேலூர், டிச.10 - நூறு நாள் வேலை கேட்டு சிபிஎம் குடியாத்தம் தாலுகா தட்டப்பாறை, பொன்னாங்கட்டியூர்  கிளைகள் சார்பில் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தட்டப்பாறை ஊராட்சியில் தங்க வேல்பட்டியில் கால்நடை கிளை மருத்துவ மனையை புதியதாக ஏற்படுத்த வேண்டும், தட்டப்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி முதல் வெள்ளேரி வரை உள்ள குண்டும் குழியுமான சாலையை சீர்படுத்த வேண்டும்,

நடப்பாறை கிராமத்தில் 30ஆயிரம் கொள்ளவு கொண்ட மேநீர் தேக்கத்தொட்டி அமைக்க வேண்டும், சிபிஎம் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் நிதியில் கட்டப்பட்ட காத்தாடிகுப்பம் சமுதாய கூடத்தை திறக்க வேண்டும்,ரேசன் கடை களில் முறையாக பொருள் வழங்க வேண்டும், தட்டப்பாறை, சின்னலபள்ளி பொன்னாங்கட்டியூர், காத்தாடி குப்பம் பகுதி சுடுகாட்டை விரிவுபடுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

கட்சியின் தட்டப்பாறை கிளை செய லாளர் ஆர்.பாபு தலைமை தாங்கினார்.கிளை செயலாளர்கள் புவனேஸ்வரி, சுப்பிர மணி, வேண்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சாமி நாதன் துவக்கி வைத்தும், தாலுகா செய லாளர் எஸ்.சிலம்பரசன் நிறைவு செய்தும் பேசினர். மாவட்டக்குழு உறுப்பினர் பி.குண சேகரன்இடைக்கமிட்டி உறுப்பினர்கள் எஸ்.குமாரி, எஸ்.கோட்டீஸ்வரன், சி.தசரதன் மற்றும் கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.