districts

img

காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க கண்காணிக்கும் பணி: வனத்துறையினர் தீவிரம்

உதகை, நவ.27- பந்தலூர் அருகே உள்ள நெலாக்கோட்டை, சேரம் பாடி மற்றும் அதன் சுற்றுவட் டாரப் பகுதிகளில் காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க  வனத் துறையினர் மூலம் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கும் பணியில்  தீவிரமாக ஈடுபட்டு வருகின்ற னர்.

நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே உள்ள நெலாக்கோட்டை, பிதற்காடு, முக் கட்டி, சேரம்பாடி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வரு கிறது. இந்நிலையில், கடந்த மூன்று நாட்க ளாக வெவ்வேறு இடங்களில் உலா வந்த  காட்டு யானைகள் சாலையோரம் நிறுத்தி  வைக்கப்பட்டிருந்த நான்கு சக்கர வாக னத்தை சேதப்படுத்தியது. அதேபோல் பாட்ட வயல் பகுதியில் கேரள மாநிலம் சென்ற  அரசு பேருந்தை வழிமறித்து தாக்க முயன் றது.

தொடர்ந்து பல்வேறு இடங்களில் யானைகளில் நடமாட்டம் அதிகரித்து வருவ தால் அப்பகுதி மக்களிடையே பெரும் அச் சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என  வனத் துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர். இதனைத்தொடர்ந்து, கூடலூர் வனகோட்ட உதவி வனப்பாதுகாவலர் கருப்பையா தலை மையில் காட்டு யானைகளை கண்கணிப்ப தற்கான சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.  இதனையடுத்து காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக் குள் நுழைவதை தடுக்கவும், காட்டு யானை களை விரட்ட வனத்துறையினருடன்  யானை  விரட்டும் குழுவினர், வேட்டை தடுப்பு காவ லர்கள் குழுக்களாக பிரிந்து ஞாயிறன்று முதல் கண்காணிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.