உடுமலை, டிச.10- பல மாதங்களாக இரா மசந்திராபுரம் பேருந்து நிறுத்தத்தில் எரியாமல் இருந்த மின் கோபுர விளக்குகள் சரி செய்யா விட்டால், லாந்தர் விளக்கு ஏற்றும் போராட்டம் நடத் தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறி வித்தவித்தை அடுத்து, மின் விளக்குகள் சரி செய் யப்பட்டது. குடிமங்கலம் ஒன்றி யம் அணிக்கடவு இராம சந்திராபுரம் பேருந்து நிறுத்தப் பகுதியில் பல லட்சம் மதிப்பீட்டில், ஆறு மாதங்க ளுக்கு முன் மின்கோபுரம் அமைக்கப்பட் டது.
ஆனால் மக்கள் பயன்பாட்டிற்கு வர வில்லை. இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் இராம சந்திராபுரம் கிளையின் சார்பில், மின் விளக்கு களை உடனடியாக சரி செய்யாவிட்டால், மின் கோபுரத்தில் லாந்தர் விளக்கு ஏற்றும் போராட் டம் நடத்துவோம் என பேருந்து நிறுத்த பகுதி யில் தட்டி வைக்கப்பட் டது. இதையடுத்து கடந்த ஆறு மாதங்களுக்கு மேல் எரியாமல் இருந்த மின்விளக்குகள் உடனடியாக சரி செய்யப்பட்டு, பொது மக் களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டு உள்ளது.