உடுமலை, டிச.11- கட்டி முடிக்கப்பட்ட சமுதாய நலக்கூடத்தை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண் டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புதனன்று எரிசினம்பட்டி கிராம நிர்வாக அலுவ லகத்தின் முன்பு மணியடித்து, சங்கு ஊதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடுமலை ஊராட்சி ஒன்றியத் திற்கு உட்பட்ட கொடிங்கியம் மற்றும் எரிசினம்பட்டி ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் சு.தமிழ்தென்றல் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், கொடிங்கியம் மற்றும் எரிசனம்பட்டி ஊராட்சியில் இருக்கும் சுடுகாட்டை சுத்தம் செய்ய வேண்டும். சாக்கடை மற்றும் குப்பைகளை அகற்ற வேண் டும். கட்டி முடிக்கப்பட்ட சமுதாய நலக்கூடத்தை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண் டும்.
ஊரக வேலை திட்டத்தில் தொழி லாளிகளுக்கு முறையாக வேலை மற் ற்றும் சம்பளம் வழங்குவதை உறுதிப் படுத்த வேண்டும். எரிசினம்பட்டி மருத்துவமனைக்கு போதுமான மருத்துவர்கள் மற்றும் செவிலியர் கள் நியமனம் செய்ய வேண்டும். மருத்துவனைக்கு வரும் நோயாளிக ளுக்கு அனைத்து வகையான மருந்து களையும் தரும் வகையில் இருப்பு வைக்க வேண்டும். எரிசனம்பட்டி, கொடுங்கியம் ஊராட்சியில் நடை பெறும் ஊழல் முறைகேடுகள் மீது நட வடிக்கை எடுக்கும் வகையில் சிறப்பு தணிக்கை செய்ய வேண்டும்.
இந்த ஊராட்சி பகுதியில் சட்டவிரோதமாக சுண்ணாம்புக்கல் உட்பட கனிம வளங்களை கொண்டு வருவோர் மீது கனிம வள சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண் டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை கள் வலியுறுத்தப்பட்டது. இப்போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உடுமலை ஒன்றியச் செயலாளர் எஸ்.ஜெகதீ சன், மாவட்டக் குழு உறுப்பினர் கன கராஜ், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ராஜகோபால், அருண்பிரகாஷ், ராம சாமி ஆகியோர் கண்டன உரையாற் றினர். கொடிங்கியம் கட்சி கிளைச் செயலாளர் ஈஸ்வரன், இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் சி.கருப் புச்சாமி உள்ளிட்ட திரளானோர் பங் கேற்றனர்.