உதகை, டிச.6- பல ஆண்டுகளாக மக்கள் பயன்ப டுத்தி வந்த நடைபாதையை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து வேலி அமைத்த தால், ஊருக்குள் செல்ல முடியாமல் அப்பகுதி மக்கள் அவதியடைந்து வரு கின்றனர். நீலகிரி மாவட்டம், சோலூர் பேரூராட் சிக்குட்பட்டது தூபக்கண்டி, சேலக்கல் கிராமங்கள். இந்த கிராமங்களில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இங்குள்ள குழந்தைகள் அருகில் உள்ள கோக்கல் அரசு பள்ளி யில் படித்து வருகின்றனர். தூபகண்டி மக்கள் ஊரில் உள்ள தனியார் நிலங் கள் இடையே உள்ள வழியை பல ஆண்டு காலமாக பயன்படுத்தி வந்துள் ளனர். இதனையடுத்து, மண் பாதை யான இந்த வழியை நடைபாதையாக மாற்ற முடிவு செய்யப்பட்டது.
இதனை யடுத்து, சோலூர் பேரூராட்சி சார்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு மலைப் பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2.5 லட்சம் செலவில் தடுப்பு சுவருடன் சுமார் 300 மீட்டருக்கு நடைபாதை அமைத்துக் கொடுத்தனர். சுமார் 50 மீட்டர் அள வில் தனியார் பட்டா நிலங்கள் இடையே நடைபாதை செல்வதால், மக்கள் பயன் பாட்டுக்காக என்பதால் தனியார் நில உரிமையாளர்கள் நடைபாதைக்காக தங்கள் நிலங்களை கொடுத்துள்ளனர். இந்நிலையில், தற்போது அப்பகுதி யில் தனியார் நில உரிமையாளர் ஒருவர் சோலூர் பேரூராட்சி அமைத்த நடை பாதையை ஆக்கிரமித்து, மக்கள் பயன் படுத்தாத வகையில் வேலி அமைத்துள் ளார். இதனால், ஊருக்குள் செல்ல முடி யாமல் தூபகண்டி மக்கள் அவதிய டைந்துள்ளனர்.
இது குறித்து ஊர் தலைவர் ஆர்.விஜயகுமார், முன்னாள் தலைவர் மணி வேல் மற்றும் ஊர் மக்கள் கூறுகையில், ‘தூபக்கண்டியில் உள்ள நடை பாதையை 50 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வந்தோம். 2013 ஆம் ஆண்டு பேரூராட்சி நிர்வாகம் சார் பில் இந்த நடைபாதை சிமெண்ட் பாதையாக அமைத்து கொடுக்கப்பட் டது. மாணவர்கள் அருகில் உள்ள பள் ளிக்கு செல்ல இந்த நடைபாதையை தான் பயன்படுத்தி வந்தனர். மக்களும் ரேசன்கடை, ஆரம்ப சுகாதார நிலை யம், கடைகளுக்கு செல்ல இந்த நடை பாதையை தான் பயன்படுத்தி வருகி றோம். இந்நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு அப்பகுதியில் தனிநபர் ஒருவர் நிலத்தை வாங்கி, நடைபாதையை ஆக்கிரமித்து வேலி அமைத்து விட்டார்.
இதனால், மக்கள் நடைபாதையை ஒட்டி யுள்ள தனியார் நிலத்தை பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது நடைபாதை ஆக்கிரமிப்பு குறித்து புகார் அளித்துள் ளோம். இந்நிலையில், ஊர்மக்களுக்கு எதிராக அந்த நிலத்தின் உரிமையாளர் சுரேஷ் என்பவர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் கடந்தாண்டு வழக்கு தொடுத்தார்.
ஆனால், வழக்கு விசார ணைக்காக அவர் தொடர்ந்து ஆஜராக ததால் கடந்த மாதம் 15 ஆம் தேதி அந்த வழக்கை நீதிபதி ஏ.மோகன கிருஷ்ணன் தள்ளுபடி செய்தார். ஆனால் தற்போது வேலி அமைத்து மக்களின் பாதையை அடைத்து அவதிக் குள்ளாக்குகிறார்கள்’ என்றனர். இது குறித்து சோலூர் பேரூராட்சி அலுவலர்களிடம் கேட்ட போது, ‘தூபக் கண்டியில் நடைபாதை ஆக்கிரமிப்பு குறித்து மக்கள் புகார் தெரிவித்திருந்த னர். இந்நிலையில், அது தொடர்பாக வழக்கு நிலுவையில் இருந்தது. தற் போது வழக்கு தள்ளுபடி செய்யப்பட் டுள்ளதால், அப்பகுதியை ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப் படும்’ என்றனர்.