districts

img

தளி பேரூராட்சி துணைத் தலைவர் கோ. செல்வன் மீது சாதிவெறித் தாக்குதல்

உடுமலைப்பேட்டை, டிச. 18 - மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைவரும். தளி பேரூராட்சி துணைத் தலைவருமான கோ. செல்வன் மீது, பேரூராட்சி அலுவலகத்திற்கு உள்ளேயே புகுந்து சாதிவெறியர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 திருப்பூர் மாவட்டம் தளி  பேரூராட்சியில் துணைத் தலைவ ராகவும் மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளராகவும் இருப்ப வர் கோ. செல்வன். இவர், புதனன்று தளி பேரூராட்சியில் நடைபெறும் வேலைகள் குறித்து அலுவலக ஊழி யர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது பேரூராட்சி அலுவல கத்திற்குள் வந்த சின்னு (எ) கருணா கரன் என்பவர், தளி பேரூராட்சியில் நடைபெறும் வேலைகளைப் பற்றி  கேட்பதற்கு நீ யார் என செல்வனை பார்த்துக் கேட்டு, சாதியைச் சொல்லி இழிவுபடுத்தி, கொலை மிரட்டல் விடுத்ததுடன், கொலைவெறி தாக்குதலையும் நடத்தியுள்ளார்.  

இச்சம்பவத்தை கண்ட பேரூராட்சி ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்த னர். இச்சம்பவம் தொடர்பாக, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே. காமராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.  மதுசூதனன், மாவட்டக்குழு உறுப்பி னர்கள் பஞ்சலிங்கம், தண்டபாணி, கனகராஜ் மற்றும் கட்சியின் உடு மலை ஒன்றியச் செயலாளர் ஜெக தீசன் ஆகியோர் தளி காவல்நிலை யத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதுகுறித்து கோ. செல்வன் கூறு கையில், “தளி பேரூராட்சியில் நடை பெற்று வரும் பல்வேறு திட்ட வேலை கள் குறித்து துறைசார்ந்த அதிகாரிகளி டம் அலுவலகத்தில் பேசிக்கொண்டு இருந்தபோது அங்கு வந்த சின்னு (எ) கருணாகரன் என்பவர், தளி பகுதி யில் வேலை செய்ய நீ யாருடா என்றும் மேலும் பல தாகாத வார்த்தைகளை கூறி என்னை கடுமையாக தாக்கினார்.

என் மீது சாதிய ரீதியாகவும், அரசு வேலைகளை செய்யவிடாமலும் கடுமையாக தாக்கினார். எனவே, அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தளி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து உள்ளேன்” என்றார். மேலும், “எனக்கும் எனது குடும்பத்திற்கும் உரிய பாதுகாப்பு தர வேண்டும்” என்றார்.