உடுமலை, டிச.10- விண்ணப்பித்த அனைவருக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான உத வித்தொகையை மாற்றுத்திறனாளிகள் துறையின் மூலமே வழங்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் சங்கம் வலியு றுத்தி உள்ளது. தமிழ்நாடு அனைத்துவகை மாற் றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப் போர் உரிமைகளுக்கான சங்கம் சார் பில், மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை அரசியல் விளக்கப்பொதுக்கூட்டம் செவ்வாயன்று, உடுமலை 9/6 செக் போஸ்ட் பகுதியில் நடைபெற்றது.
உடுமலை தாலுகாச் செயலாளர் எ.மாலினி தலைமை ஏற்றார். எம். ஆறு முகம் வரவேற்றார். கோரிக்கைகளை விளக்கி அனைத்துவகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கத்தின் அகில இந் திய தலைவர் பி.நம்புராஜன், மாநிலப் பொருளாளர் கே.சி.சக்ரவர்த்தி, திருப் பூர் மாவட்டச் செயலாளர் பா. ராஜேஷ் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர். இதில், மாற்றுத்திறனாளுக்கு வழங் கப்படும் அனைத்து உதவி தொகை கள் மற்றும் நலதிட்டங்களை மாற்றுத் திறனாளிகள் துறையின் மூலம் மட் டுமே வழங்க வேண்டும்.
ஆந்திர மாநி லத்தில் வழங்குவது போல் ரூபாய் 10 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும். உதவித்தொகை கேட்டு விண்ணப்பம் செய்த அனைவருக்கும் உடனடியாக உதவித்தொகை மற்றும் இதர சலுகைகளை வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிக்கு உதவித்தொகை வழங்க வயது வரம்புகளை நீக்க வேண்டும். ஊராக வேலை திட்டத்தில் அனைவருக்கும் வேலை தர வேண் டும்.
ஊராக வேலை திட்டத்தில் மாற்றுத்தினாளிகளுக்கு நடைமுறை யில் உள்ளபடி நான்கு மணி நேர வேலையும் பணித்தளத்தில் இலகு வான வேலைகளை வழங்குவதை நடை முறை படுத்த வேண்டும். தில்லி உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி வறுமைக் கோட்டிற்கு கீழ் என்ற அடிப்படையில் குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பம் செய்த அனைத்து மாற்றுத்திறனாளி களுக்கு குடும்ப அட்டை வழங்க வேண் டும் என்று பொது கூட்டத்தில் வலியு றுத்தபட்டது.
முன்னதாக, தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் மற்றும் கலை ஞர் சங்கத்தின் மக்கள் கலைக்குழு வின் நிகழ்ச்சியுடன் தொடங்கிய இப் பொதுக்கூட்டத்தில், சிஐடியு மாவட்ட துணைச்செயலாளர் எஸ். ஜெகதீசன், கட்டிட கட்டுமான சங்கத்தின் செயலா ளர் கனகராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மேலும் சங்கத்தின் நிர்வாகிகள் 9/6 செக்போஸ்ட் ஆர். முத் துக்குமார், ஆர்.வேலூர் எஸ்.குரு சாமி, பள்ளபாளையம் எ. பாலசுப்பிர மணி மற்றும் கடத்தூர் எ. அழகர்சாமி உ ள்ளிட்ட திரளனோர் கலந்து கொண் டனர். முடிவில், கணியூர் கே.பி.கருப்பு சாமி நன்றி கூறினார்.