districts

img

தீக்கதிர் செய்தி எதிரொலி: சேதப்படுத்தப்பட்ட வழிகாட்டி பலகைகள் புதிதாக அமைப்பு

உதகை, டிச.17- மஞ்சூரில் இருந்து கோவை செல் லும் கெத்தை மலைப் பாதையில் யானைகளால் சேதப்படுத்தப்பட்ட வழி காட்டி பலகைகள் மாற்றப்பட்டு, தற் போது புதிதாக வழிகாட்டி பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன.  நீலகிரி மாவட்டம், உதகை அடுத்த  மஞ்சூரிலிருந்து கோவை செல்லும்  கெத்தை மலைப்பாதை பெரும்பாலும் அடர் வனப்பகுதியை கொண்டதாக உள்ளது.

இந்த வனப்பகுதியில் யானை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட பல் வேறு வன விலங்குகள் வசித்து வரு கின்றன. இதையொட்டி இந்த சாலை யில் மாலை 6 மணிக்கு பிறகு வாகன நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த வனப்பகுதிகளில் உள்ள நீரோடைகளில் தண்ணீர் குடிக்க யானைக் கூட்டங்கள் செல்வ தால் பிரதான சாலையாக உள்ள மலைப் பாதைகளை கடந்தும் முகாமிட்டும் உலாவுகின்றன. இவ்வாறு வரும் காட்டு  யானைகள் நீண்ட நேரம் சாலைகள்  நிற்பதால் அவ்வப்போது போக்கு வரத்து பாதிக்கப்படுகிறது.

சில நேரங் களில் காட்டு யானைகள் குட்டிகளுடன் சாலையோரம் உள்ள தடுப்புகள், வழி காட்டி பலகைகள் ஆகியவற்றை சேதப் படுத்தி விடுகின்றன.  கடந்த சில மாதங்களுக்கு முன்பு  கெத்தை மலை பாதையில் யானைகள்  கூட்டம் வழிகாட்டி பலகைகளை உடைத்து சேதப்படுத்தி வைத்திருந் தது. இதனால், அந்த வழியாக செல்லும்  வாகன ஓட்டிகள் குழப்பமடைந்தனர்.  இதுகுறித்து தீக்கதிர்செய்தியில் படத்துடன் விரிவாக செய்தி வெளி யிடப்பட்டது.  இதைத்தொடர்ந்து தற்போது நெடுஞ்சாலைத்துறை சார்பில் வழி காட்டி பலகைகள் அகற்றப்பட்டு புதி தாக வழிகாட்டி பலகைகள் பொருத்தப் பட்டு உள்ளன.

இதேபோல் ஒரு சில  இடங்களில் இதற்கு முன்னர் இருந்த  வழிகாட்டி பலகைகளும் சரி செய்யப் பட்டு உள்ளன. இதனால், கொண்டை ஊசி வளைவுகள் இருப்பது குறித்து  புதிதாக வரும் சுற்றுலாப் பயணிக ளுக்கு எளிதில் தெரிகிறது. இதேபோல்  ஒரு சில இடங்களில் சாலை விவரங்க ளில் தடுப்புகள் சேதமடைந்து உள்ளது என்றும் இந்த பிரச்சினைகளுக்கும் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.