உதகை, மே 14- உதகை அரசு ரோஜா பூங்காவில் 17 வது ரோஜா கண்காட்சி சனியன்று துவங்கியது. 89,000 ரோஜா மலர்களை கொண்டு பல்வேறு வடிவங்களில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளதை சுற் றுலா பயணிகள் ஆர்வத்துடன் ரசித்து வருகின்றனர். நீலகிரியில் ஆண்டுதோறும் கோடை விழாவின் ஒரு பகுதியாக ரோஜா மலர் கண்காட்சி நடைபெறும். அந்த வகையில் ரோஜா கண்காட்சி சனியன்று தொடங்கியது.சனி, ஞாயிறு என இரு நாட்கள் நடைபெறும் இந்த ரோஜா கண்காட்சியில் 89 ஆயிரம் ரோஜா மலர்களைக் கொண்டு பல்வேறு அலங்கார சிற்பங்கள் வைக்கப்பட்டுள் ளன. குறிப்பாக 41 ஆயிரம் ரோஜா மலர்களை கொண்டு மரத்தின் மேல் வீடு, 9000 ரோஜாக்களை கொண்டு படச் சுருள், 6,000 ரோஜாக்களை கொண்டு குழந்தைகளைக் கவரும் வகையில் கார்ட்டூன் சித்திரங்களான மோட்டு, பட்லு, 5000 ரோஜாக்களால் பியானோ ஆகியவையும், உதகை தோன்றி 200 ஆண்டுகளானதை நினைவு கூறும் வகையில் ரோஜாக்களால் வடிவமைக் கப்பட்ட 00TY 200 ஆகிய அலங்கார வடி வங்கள் வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஈரோடு, தர்மபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட் டங்களில் இருந்தும் தோட்டக்கலை துறை சார்பில் ரோஜாக்களால் வடி வமைக்கப்பட்ட அலங்கார சித்திரங்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் வகையில் வடிவமைக்கப்பட் டுள்ளது.