உதகை, டிச.11- உதகை அரசு தாவரவி யல் பூங்காவில் இருந்து சென்னை மலர் கண்காட் சிக்கு 6 லட்சம் மலர் நாற்று கள் அனுப்பும் பணிகள் தீவிர மாக நடைபெற்று வருகி றது. தமிழ்நாடு தோட்டக் கலைத்துறை சார்பில் சென்னை செம்மொழிப் பூங்காவில் கடந்த சில ஆண்டுகளாக மலர் கண்காட்சி நடத்தப் படுகிறது.
இந்நிலையில், சென்னையில் இந்த மாதம் அல்லது அடுத்த மாதம் நடக்கும் மலர் கண்காட்சிக்காக தமிழகத்தில் உள்ள தோட் டக்கலை துறை பூங்காக்களில் மலர் நாற்று கள் உற்பத்தி செய்யப்பட்டு சென்னைக்கு அனுப்பபடும். அந்த வகையில் நீலகிரியில் உள்ள முக்கிய பூங்கவான உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நடப்பட்ட விதைகள் தற்போது செடிகளாகி பூக்கும் தருவாயில் உள்ளது.
இந்த பூந்தொட்டிகளை லாரிகள் மூலம் சென்னைக்கு அனுப்பும் பணிகள் புத னன்று முதல் தொடங்கி தீவிரமாக நடை பெற்று வருகிறது. இதுகுறித்து தோட்டக்கலை துணை இயக்குனர் பெபிதா கூறுகையில், சென்னை யில் நடக்கும் மலர்கண்காட்சிக்காக நீல கிரி, கிருஷ்ணகிரி, கொடைக்கானல், கன்னி யாகுமரி, மதுரை ஆகிய இடங்களில் இருந்து மலர்கள் எடுத்து வரப்பட்டு கண்காட்சியில் பயன்படுத்தப்பட உள்ளது. அரசு தாவரவி யல் பூங்காவில் தூவப்பட்ட விதைகள் தற் போது பூக்கும் தருவாயில் உள்ளன. இங்கி ருந்து பெஹோனியா, பெட்டுன்னியம், இன்கா, பிரெஞ்ச் மேரி கோல்டு, உள்பட 32 வகையான 6 லட்சம் மலர் செடிகள் அனுப் பப்படும், என்றார்.