districts

img

மின்வாரியத்தை தனியாருக்கு தாரைவார்ப்பதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

உடுமலை, டிச.10- மின்வாரியத்தைப் பல பிரிவுகளாகப் பிரித்து, தனி யாருக்குத் தரும் வகையில் பாஜக அரசு மாநில அரசுக ளுக்கு நிர்பந்தம் கொடுத்து வருகிறது. இதை கண்டித்து  உடுமலை மின் வாரிய அலுவ லகத்தின் முன்பு செவ்வா யன்று தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

 பாஜக ஆளும் உத்தரப்பிரதேசம் மற்றும்  சண்டிகரில் மாநில மின்வாரியங்கள் கம்பெ னிகளாக பிரிக்கப்பட்டு உள்ளன. மேலும்  ஒன் றிய அரசு நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் விநி யோக பிரிவுகளை தனியாருக்கு விடுவதற் கான நடவடிக்கையை மாநில அரசுகள் எடுத்து வருகிறது. நாடு முழுவதும் மின்வாரி யங்களை தனியாருக்கு தருவதைக் கண் டித்து பல போராட்டங்கள் நடைபெற்று வரும்  நிலையில், சண்டிகர் மற்றும் உத்திர பிரதேச  மின்வாரிய பணியாளர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இவர்களுக்கு ஆதர வாக உடுமலை மின் பகிர்மான வட்டத்தில்  மின் ஊழியர் கூட்டுக் குழு சார்பில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தண்டபாணி தலைமை வகித்தார். இதில் திரளான மின்  ஊழியர்கள், மின்வாரியத்தை தனியாருக்கு தருவதைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பி னார்கள்.