districts

img

தளி பேரூராட்சி துணைத் தலைவர் மீது தாக்குதல் சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்

உடுமலை, டிச.22- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தளி பேரூராட்சி துணைத் தலைவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்து, ஞாயி றன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம், உடுமலை  அருகே உள்ள தளி பேரூராட்சி துணைத் தலைவராக மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பி னரும், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவருமான கோ.செல்வன் செயல்பட்டு வருகிறார்.

 தற்போது உடுமலை கால்வாய்  அருகே உள்ள மயானத்தில் சுற்றுச் சுவர் கட்டுதல் உள்ளிட்ட மேம்பாட்டு  பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு வருவாய்த்துறை, பொதுப் பணித்துறைக்கு சொந்த மான இடமும் உள்ளதாகக் கூறி, இரு தரப்பிற்கும் இடையே பிரச்சனை  ஏற்பட்டுள்ளது. உரிய அளவீடு செய்து பணி மேற்கொள்ள, அதிகாரி கள் மற்றும் விவசாயிகள் வலி யுறுத்தி வருகின்றனர்.

 இந்நிலையில், கடந்த டிச.18  அன்று பேரூராட்சி அலுவலகத்தி லிருந்த துணைத்தலைவர் செல்வனி டம், தளியைச் சேர்ந்த, சின்னு (எ) கருணாகரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, ‘மலைப்பகுதியில் இருந்து வந்து, தளியில் மயானம்  கட்ட நீ யார்’ என தகாத வார்த்தை களில் திட்டி, அங்கிருந்த சேரை எடுத்து தாக்க முயற்சித்தார். பேரூராட்சி அலுவலகத்திற்கு உள்ளேயே புகுந்து, சாதிய வன்மத் தோடு தளி பேரூராட்சியின் துணைத்  தலைவர் செல்வன் மீது தாக்குதல் நடத்தியவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அச்சமின்றி நிர்வாக பணியாற்ற பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னர் ஞாயிறன்று தளி பேரூராட்சி அலு வலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஜெகதீசன் தலைமை வகித்தார். கட்சியின் மத்தியக் குழு உறுப்பி னர் பெ.சண்முகம் கண்டன உரை யாற்றினார்.

இதில் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.மதுசூதனன், நகரச் செய லாளர் தண்டபாணி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் கனகராஜ், பஞ்ச லிங்கம், ஒன்றியச் செயலாளர்கள் சசிகலா, வடிவேல், மலைக்கமிட்டிச் செயலாளரும், பேரூராட்சி துணைத் தலைவருமான கோ.செல்வன், மலைக்கமிட்டி உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.