districts

img

ஆக்கிரமிப்பு வேலியை அகற்றிய பொதுமக்கள்

உதகை, டிச.11- தூபக்கண்டியில் நடைபாதையை தனியார் ஒருவர் வேலி போட்டு ஆக்கி ரமித்திருந்த நிலையில், அந்த வேலியை  பொதுமக்களே அகற்றி பாதையை மீட்டெடுத்தனர். நீலகிரி மாவட்டம், சோலூர் பேரூ ராட்சிக்குட்பட்ட தூபக்கண்டி, சேலக் கல் கிராமத்தில் உள்ள நடைபாதையை  பொதுமக்கள் பல ஆண்டுகாலம் பயன் படுத்தி வந்தனர். இதனையடுத்து, கடந்த 2013 ஆம் ஆண்டு மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2.60 லட் சம் செலவில் தடுப்பு சுவருடன் 300 மீட்ட ருக்கு மண் பாதையாக இருந்தது சிமெண்ட் நடைபாதையாக மாற்றப்பட் டது.

இதில், சுமார் 50 மீட்டர் அளவில்  தனியார் பட்டா  நிலங்கள் இடையே  நடைபாதை செல்வதால், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக என்பதால் தனியார் நில உரிமையாளர்கள் நடைபாதைக் காக தங்கள் நிலங்களை கொடுத்துள் ளனர். இந்நிலையில், தற்போது அந்த பகுதியில் தனியார் நில உரிமையாளர் ஒருவர் சோலூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அமைத்த நடைபாதையை ஆக்கிரமித்து இரும்பு கம்பியில் தடுப்பு வேலி அமைத்தார். மேலும், இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் தார்.

பொதுமக்கள் சார்பில் மேல்முறை யீடு செய்யப்பட்டது. இதில் தனியார் தரப்பில் யாரும் ஆஜராகாததால், வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு பொதுமக்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து கிராம மக்கள், பெண்கள் ஆகியோர் இணைந்து புத னன்று தனியார் சார்பில் அமைக்கப் பட்ட இரும்பு தடுப்பு வேலியை திடீ ரென அகற்றியதால் பரபரப்பு ஏற்பட் டது. இதனால், அங்கு பொதுமக்க ளுக்கும் தனியார் உரிமையாளர் தரப் புக்கும் இடையே இருதரப்பு பிரச்சனை ஏற்படும் சூழல் உருவானதால், போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டனர்.  

இதுகுறித்து ஊர் பொதுமக்கள் கூறுகையில், தூபக்கண்டியில் உள்ள நடைபாதை 1933 ஆம் ஆண்டு முதல் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு  அந்த பகுதியில் தனியார் ஒருவர்  நிலத்தை ஆக்கிரமித்து  வேலி அமைத் தார்.  இதனால், நடைபாதை இல்லாமல் அவதிப்பட்டு வந்தோம். இது குறித்து வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்தோம். ஒரு நாள் முழுவதும் காத்திருந்தும் வருவாய் துறையினர் நடவடிக்கை எடுக்காததால், தற்போது நடைபாதை ஆக்கிரமிப்பை அகற்றி யுள்ளோம், என்றனர்.