உதகை, டிச.7- பந்திப்பூர் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதியில், குட்டியுடன் நின்ற யானையை படம் பிடிக்கிறேன் பேர்வழி என இடையூறு ஏற்படுத்திய சுற்றுலாப் பயணிகளை, தாய் யானை விரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற் படுத்தியது.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகதுக்கு அரு கில் கர்நாடக மாநிலத்தின் பந்திப்பூர் புலிகள் காப்பகம் உள் ளது. இங்கு ஏராளமான புலிகள் மற்றும் யானைகள் உள்ளன. இங்குள்ள வன விலங்குளை வனத்துறை வாகனங்களில் சென்று பார்வையிட்டு வருகின்றனர். இந்நிலையில், வெள்ளி யன்று சில வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பந்திப்பூர் பூங்காவில் வனத்துறை வாகனத்தில் ஜீப் சவாரியில் ஈடுபட்ட னர். அடர்ந்த வன பகுதியில் சென்று கொண்டு இருந்தபோது ஒரு இடத்தில் ஒரு தாய் யானை இரண்டு குட்டிகளுடன் மேய்ச்சலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. சுற்றுலாப் பயணி கள் ஜீப்பை அதே இடத்தில் நிறுத்தி போட்டோ எடுத்துக் கொண்டிருந்தனர். கூட்டத்தில் இருந்த தாய் யானை ஆவேச மடைந்து ஜீப்பை நோக்கி ஓடிவந்தது. வனத்துறை ஓட்டுநர் மெதுவாக ஜீப்பை எடுத்தார். ஆனால், யானை விடாமல் அரை கிலோமீட்டர் தூரம் விரட்டியது. வாகனத்தில் இருந்த வெளி நாட்டு சுற்றுலாப் பயணிகள் யானையின் ஆக்ரோஷத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இன்னும் மெதுவாக சென்றால் யானை ஜீப்பை கவிழ்த்து விடும் என்ற அச்சத்தில் வாகன ஓட்டி உடனடியாக ஜீப்பை வேகமாக இயக்கி அங்கிருந்து தப்பித்து பந்திப்பூர் அலுவலகம் வந்து சேர்ந்தனர். இந்த வீடியோ தற் பொது சமூக வலைதளங்களில் வைலாகி வருகிறது.